Wednesday, December 19, 2007

என் விடுமுறை!!!!!

ஜெட் லாக் அதிகமில்லை. எப்பொழுதும் போல் இரவு 11 மணிக்கு தூங்கி,காலை 6 மணிக்கு விழித்துவிடுவேன். எந்திரித்து கிச்சன் பக்கம் வந்தால், நமக்கு முன்பே வீட்டிலுள்ள யாவரும் விழித்து ரெடியாகி, ஆபிஸிற்கும், ஸ்கூலிற்கும் செல்ல தயாராகிவிடுகிறார்கள். 7 மணிக்கெல்லாம் வீடு அமைதியாகிவிடுகிறது. அமெரிக்கர்கள் காலையில் வேலைக்கு செல்வதை மிகவும் விரும்புகிறார்கள் போலும்...போன வாரம் முழுவதும் நம் வீட்டு குழந்தைகளுக்கு நிறைய ACTIVITIES. Basket Ball, guitar class, viola class, Regional Orchestra- இப்படியாக டைம் நன்றாக போய்விட்டது. the children have to be kept busy here and so they need to have all these activities. கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளில் பங்கு கொள்கிறார்கள்...வட மாகணத்தை விட இங்கு வெதர் மிகவும் நன்றாக உள்ளது. கிடைக்கும் நேரங்களில் ஒரு சின்ன வாக்கிங் போய்விடுவேன். நம் ஊரில் ஆடு மாடுகள் எப்படி நிழலில் படுத்து கிடக்குமோ அது போல மான் குட்டிகளும் நிழலில் படுத்து கிடக்கின்றன. இவைகளால், காரோட்டிகளுக்கு கஷ்டமும் உண்டு.. திடீரென்று ரோடில் பாய்ந்துவிடுகின்றன......போன வாரம் ஒரு கான்சர்ட்டுக்காக எங்கள் வீட்டு குழந்தையின் ஸ்கூலுக்கு சென்றோம். 16 வயது பெண்களும், ஆண்களும் பள்ளிகூட வராந்தாவில், கைகோர்த்து கொண்டு, திரிகிறார்கள். அது அவர்களின் கல்ச்சர். (எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது)


நாங்கள் இருக்குமிடம் மிகவும் சுத்தமாக உள்ளது. மக்கள் ஒரு டிசிப்ளினோடு வண்டி ஓட்டுகிறார்கள். ஸ்டாப் -sign-ல் நிறுத்தி இரண்டு பக்கமும் பார்த்து செல்கிறார்கள்.. horn சத்தமில்லை. பொறுமையாக சிக்னலில் நிற்கிறார்கள். நம் நாட்டில் மட்டும் தான் சிக்னல் பக்கம் இரண்டு போலிஸ்காரர்கள் நிற்க வேண்டிய நிலமை.


1989-ல் முதன் முதலில் நான் அமெரிக்கா வந்தபோது நான் மிகவும் சாப்பிட்ட ஒரு பொருள்.. DUNKIN DOUGHNUTS...........

SAN ANTONIO- வில்.. இந்த DOUGHNUTS கிடையாது. ஆகவே நாங்கள் CRISPY CREME என்ற ஒரு கடைக்கு சென்றோம். இங்கு DOUGHNUTS செய்வதை நாம் வெளியிலிருந்து பார்க்க முடியும். பார்க்க நன்றாகத்தான் இருந்தது.. சாப்பிட்டபோதுதான் என்னவோ மாதிரியிருந்தது..(COOKING OIL மாற்றி எத்தனை நாளாச்சோ என்று தோணியது..)


McDonalds -அப்படியேதான் உள்ளது.. அதே சுவைதான். ரெட் மீட் & போர்க் நான் சாப்பிடுவதில்லை. ஆகவே வெறும் french fries and chicken nuggets மட்டும் சாப்பிட்டேன். their apple pie is my all time favourite.


எல்லா டி.வி சேனல்களிலும் traffic update--ம் weather update-ம் எப்பொளுதும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்..

1989-களில் நானும் என் மாசியும் மிக விரும்பி பார்த்த ஒரு ப்ரோக்ராம்- the wheel of fortune- America's no:1 Game Show...... Vana white will never grow OLD??????......it is still going on! won't boredom set in by watching the same show, same person conducting the show, and the same model?

ஒரு குக்கிங் சானலும் உண்டு...what elaborate cooking they do! என்ன இருந்தாலும் நம் ஊர் சமையலுக்கு எதுவும் ஈடாகாது....

i have a great passion for reading.......இங்கு வந்து இதுவரை ஐந்து புத்தகங்கள் படித்து விட்டேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் " the five love languages" by Gary Chapman. visit this site

As an older person, I request all the young and married couples to read this book. என் விடுமுறை மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.....

Wednesday, December 12, 2007

என் பயணம்

38000 feetabove sea level..


டிசம்பர் 8-ம் தேதி காலை 2 மணிக்கு என் ஃப்ளைட். 7th evening hospital-லிருந்து வீட்டிற்கு வரும் போது மாலை 6 ஆகிவிட்டது. கடைசி நேர பாக்கிங். ஒரு செக் லிஸ்ட் வைத்து எல்லாம் சரி பார்த்தேன். ஆனாலும் மனதில் ஒரு கவலைதான். இதற்கு முன் வெளிநாட்டிற்கு செல்லும்போது, மாசிக்குதான் ஒரே குஷி.. " என் பொண்டாட்டி ஊருக்கு போறா"- னு எல்லோருக்கும் ஒரு போன் போட்டு விடுவார்.. வீடு ரொம்ப பிசி ஆக இருக்கும். போலீஸ்காரர்களெல்லாம் நம்மை சுற்றி வேடிக்கை பார்ப்பார்கள். எல்லோரும் ஆளுக்கு ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள். மாசியும் மிகவும் அக்கறையோடு எல்லாவற்றையும் வாங்கி என்னிடம் கொடுத்து அவசியம் வாங்கி வரும்படி சொல்லுவார் . என்னை ஏர் போர்ட்டில் கொண்டு விடுவார்.(சில வருடங்கள் முன்பு வரை ஏர்போர்ட் செக்யூரீட்டி தமிழ் நாடு போலிஸ் வசம் இருந்தது. அதனால் அவரும் அவர் ஃரண்ட்ஸும் என் கூட ப்ளேன் வாசல் வரை வ்ந்து வழி அனுப்புவார்கள். )

சென்னை ஏர்போர்ட் செல்ல 'Aviation express taxi --ல் செல்ல திட்டமிட்டேன். கடசியில் என் சகோதரி தன் கார் ட்ரைவரை அனுப்பினார். ட்ரைவர் பத்தரை மணி போல கொண்டுவிட்டுவிட்டு போய்விட்டார். இரண்டு மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் மூன்று மணிக்கு கிளம்பியது. புரியாத ஒரு ஃரெஞ். புரியாத ஒரு ஆங்கிலம்.. ஏதோ லேட் ஆனதற்கு மன்னிப்பு கோருகிறார் என்று மட்டும் புரிந்தது. அவசர அவசர அவசரமாக ஒரு snacks . லைட்டெல்லாம் off பண்ணிவிட்டார்கள். எனக்கும் நல்ல தூக்கம். ப்ளேனுக்குள் நம் பாண்டிச்சேரி மக்கள் கூட்டம். கடைசியில் ப்ளேன் நின்றதும், கேப்டன் ஏதோ சொல்ல எல்லோறும் கை தட்டினார்கள். (எதற்கு கை தட்டினார்களென்று யாரை கேட்பது). பாரிஸ் வந்து அடையும் போது காலை ஒன்பது மணி (local time). பயங்கர பசி. குளிர். இந்த ப்ளேன்களில் பசிக்கும் போது நமக்கு தேவையான சாப்பாடு கொடுக்கமாட்டார்கள். எலவேட்டரில் இறங்கி ட்ராம் புடிச்சு அடுத்த டெர்மினலுக்கு சென்றேன். you are the last passenger என்று ஒரு அம்மணி கூறினார். அந்த டெர்மினலிலிருந்து ஒரு பஸ் மூலமாக பாரிஸ்- ஹூஸ்டன் ப்ளேனுக்கு சென்றேன். இந்த ஃfளைட் கிட்டதட்ட 11 மணி நேர ஃFளைட். இது மாதிரி long flight-l ட்ராவல் பண்ணும்போது வெஜிட்டேரியனாகி விடுவது நல்லது. சீக்கிரம் சாப்பாடு கிடைக்கும். சாப்பிடும் படியாகவும் இருக்கும். ஏதோ சாப்பிட்டுவிட்டு பின்னும் ஒரு தூக்கம். தலை வலி வேறு. க்ரீன் லேண்ட் வழியாக செல்லும் போது கீழே பார்த்தேன். அம்மாடியோவ்..என்ன அழகு.. மேக மூட்டம் இல்லாததால் நில பரப்பு நன்றாக தெரிந்தது. நிலமா? இல்லை.. ஒரே பனி(snow capped mountains) .. ஆங்காங்கே கொஞ்சம் மலை தெரிந்தது. மனிதர்கள் வாழ சான்ஸே இல்லை. ஆனால் ரொம்ப அழகாத்தான் இருந்தது.

-Houston வந்த போது மதியம் மூன்று மணி. அப்பாடா என்று இருந்தது. ஆனால் பிரச்னைகளே இங்குதான் ஆரம்பமாகிறது. இம்மிக்ரேஷ்ன் முடிந்து, கஸ்டம்ஸ் நுழைந்த போது ஒருத்தர் என்னவோ நான் ஏதோ கடத்தி கொண்டு செல்வது போல என்னை தனியாக அழைத்துச் சென்று கேள்விகளுக்கு மேல் கேள்வி.. "உன் பெட்டியில் இருக்கும் திங்ஸ் எல்லாம் நீதான் பேக் செய்தாயா என்ரும், யாருக்காவது நீ வேறு திங்க்ஸ் கொண்டு வந்திருக்கிறாயா என்றும் கேள்விக்கு மேல் கேள்விகள். திரும்பி ஓடி போய்விடலாமா என்று ஒரு நினைப்பு.....ஆனாலும் நம் மக்கள் மீதுதான் என் கோபம் திரும்பியது.... என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இந்தியரிடமிருந்து, புதினா இலை, கொத்தமலி இலை, கறிவேப்பிலை, மற்றும் சாதம், சாம்பாரெல்லாம் எடுத்து வெளியே போட்டார்கள். தடை செய்யப் பட்டவைகளை நாம் ஏன் கொண்டு செல்ல வேண்டும்? அதனால்தானே இந்தியர்களென்றால் இவ்வளவு கேவலமாக ஒரு ட்ரீட்மெண்ட்?
இந்த விதமான் ட்ரீட்மெண்ட் என் மனதை என்னவோ செய்தது. என் பெட்டிகளை ஸ்கேன் பண்ணிவிட்டு "lady, you may go " என்றார் . அடுத்த ஃFளைட் HOUSTON TO SAN ANTONIO .. அது இரவு 7.55 மணிக்கு. 35 நிமிடம் தான் SAN ANTONIO செல்ல. ஒரு வழியாக San Antanio
வந்து சேர்ந்தேன்.


என் தம்பியின் வீடு ஒரு கன்ட்ரி சைடில் இருக்கிறது.. இரண்டரை ஏக்கர் பரப்பு. ஒரு சிறிய குன்றின் மேலுள்ளது. மிகவும் அமைதியான இடம். road-ல் ஒரு நாளைக்கு பத்து கார்கள் கூட செல்வது கிடையாது. அத்தனை calm place. நல்ல weather. மிகவும் அருமையான இடம். முற்றிலும் இங்கு இருப்பவர்கள் மிகவும் வயதானவர்கள். ரோடில் நாம் நடந்து செல்லும் போது ஒரு hi! சொல்லாமல் போகமாட்டார்கள். ஏகப்பட்ட மான்கள்.. நம் வீட்டிற்கு பின்னால், ரோடில், குட்டிகளோடு செல்வதை பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு செடியையும் விட்டு வைப்பதில்லை.


இப்படியாக என் விடுமுறை ஆரம்பித்துள்ளது.

Saturday, December 1, 2007

Thankyou

many blogger friends have paid their tribute by writing and lighting a candle in my Masi's memorial website. I want to thank you all. i also want to thank all the loved ones who called me on that day.
http://masilamani-sachidanandam.memory-of.com/

I am leaving Chennai on the 8th of December to San Antonio -Texas. I will be there till 8th January. I plan to go to Sante Fe, New York and CT. This is my e-mail. delphinevictoria@gmail.com.
will come and continue in January.

Sunday, November 18, 2007

என் கடைசி பதிவுங்கோ!

என்ன ஆச்சுன்னு கேட்காதுங்க! ஆனால் இதுதான் என் கடைசி பதிவு.....
என்னவோ தெரியலங்க இப்பல்லாம் இந்த ஸண்டே வந்தா பிடிக்கல..,, ஒரே போர்தான். அதுவும் மழை பெய்தால் .... .. எனக்கு போர் அடிச்சா உங்களுக்கும் போர் அடிச்ச மாதிரிதானே! நாளை திங்கள் கிழமையா... உடனே monday morning blues- னு ஒரு status message போட்டு வச்சுருவேன். திங்கள் கிழமை என்ன தோணும்னா sunday யே தேவலைன்னு தோணும்.. சரிதானே! சரி வாங்க வந்து கொஞ்சூண்டு சிரிச்சுட்டு போங்க,,,...
நம்ப டாக்டருங்க ஜோக்குதான். அவங்க பண்ணுகிற அலம்பு தாங்கலங்க..


"இன்னைக்கு உங்களுக்கு ஆபரேஷன்?"
"போங்க டாக்டர், இன்னைக்குதான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்துறீங்களே!"

டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"
"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."
"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."

"டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?"
"அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!"

டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.

என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆபரேஷன் பண்ணிட்டீங்களா?"
"யோவ் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன். கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே."


"அந்த டாக்டர் மத்தவங்களைத் திட்டும்போது அடிக்கடி 'எலும்பை' எண்ணிடுவேன்னு சொல்றாரே, ஏன் அப்படி?"
"அவர் எலும்பு நோய் நிபுணராச்சே அதான்!"

"டாக்டர், எனக்கு காலையிலேர்ந்து உடம்பெல்லாம் அரிக்குது!"
"எனக்கு காலையிலேர்ந்து கை அரிக்குது, அது உங்களாலே எனக்கு வருமானம் வர்றதுக்குத்தானா?"

"டாக்டர், நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பிலே ஒட்டமாட்டேங்குது!"
"அப்படியா! தினமும் ஒரு பாட்டில் கோந்து சாப்பிடுங்க உடம்பிலே ஒட்டும்!"

சரிங்க... வற்ரட்டுமா?
ஜனவரியில் 2008-ல் பார்ப்போம்.
(இந்த வருஷத்து கடைசி பதிவு இதுதாங்கோ!

Saturday, November 17, 2007

ஏன் இந்த கொலை வெறி..?/?????

ஏன் இந்த கொலை வெறி..இளம் பருவத்தினர்....... வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கண்மணிகள்.. ஏன்? ஏன் இப்படி.?


ஒவ்வொறு நாளும் ஐ.சி.யூ-க்குள் நுளையும் போது மனசு 'பட படவென்று அடிக்கிறது... மிகவும் செல்வாக்கு பெற்ற பி.பி.ஓ-க்கள் தங்கள் கீழ் வேலை செய்யும், பணியாளர்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது? அவர்கள் உயிருக்கு என்ன உத்திரவாதம் உள்ளது.?, சென்னையில் மட்டும் தான் இப்படியா?
நேற்று விடியற்காலையில் நான்கு மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் பயணித்த கேப் median மீது மோதி, நான்கு பேருக்கு பலத்த அடி. அதில் ஒரு இளைஞன் மிகவும் சீரியசான நிலையில் உள்ளார்.

இந்த குழந்தைகளின் பெற்றோர்களை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு. முதல் இரண்டு நாட்களுக்கு Company HR " Dont worry, we will take care" என்கிறார்கள். after that they simply disppear from the scene.
பெரும்பாலும் மிகவும் ஏழ்மையான குடும்பத்து பெற்றோர்களைத் தான் பார்க்க முடிகிறது.

அதுபோல நேற்று evening Tidel park road-l தலை தெறிக்க சென்ற ஒரு 2 Wheeler Rider ( 'Dominos Pizza ' rider.) எவ்வளவு அழகாக Balance செய்து ஒவ்வொறு ட்ராக்காக மாறி மாறி கடைசியில், சிக்னலுக்காக நிறுத்தும் போது கீழே விழுந்தார்.(அவ்வளவு வேகம், பரபரப்பு). ஒரு ஐந்து நிமிடம் லேட்டான pizza ஆறி போய்விடுமோ!
its ok if the pizza gets cold, but not our life!

Thursday, November 15, 2007

நினைவுகள்..

ஆறடிக்கு மேல் இருப்பாரா?
இதுதான் என மனதில் அவரை பார்த்ததும் தோன்றிய முதல் கேள்வி. அசத்தும் புன்னகையுடன் கூடிய சிரிப்பு....
என்னையும், என் ஃப்ரண்டையும் அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்தார்.
டிசம்பர் மாதத்தில் ஒரு மாலை வேளை...
இடம்: Fort St. George - உள்ளே இருக்கும் church. அங்கு நடந்த கிறிஸ்துமஸ் ஆராதனை (Christmas Carol Service)-ல் கலந்துக் கொள்ள நான் சென்ற போதுதான் அவரைப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் சென்று என் பக்கத்து சீட்டில் குனிந்து prayer பண்ணி கொண்டிருந்த வரை பார்த்ததும், மனதில் ஒரு சந்தோஷம்...திருட்டுத்தனமாய் ஒரு லுக்...
கட்டை குரலில் பாடினார். (என்னடா இப்படி பாடுகிறார் என்று யோசித்தேன்)
service முடிந்து வெளியே வந்தோம்.... ஒரு பத்து நிமிஷம் இருங்க இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்..
காக்கி யூனிஃபார்மில் திரும்பி வந்தவரை பார்த்ததும் என் கண்களில் ஒரு மிரட்சி.
"நல்லா பாடுறீங்களே! கான்வென்டில் படித்தீர்களா" என்றார்.
" ஆமாம்". என்றேன். அவர் யூனிஃபார்மில் என் கண். இவ்வளவு பக்கமாக நின்று எந்த காவல்துறை அதிகாரியுடனும் பேசியதில்லை..
அவருடன் பேசும் போது நான் மொத்த தலையும் உயர்த்தி பார்க்க வேண்டியதிருந்தது.
ஆனால் அவரோ தன் கண்ணை மட்டும் தாழ்த்தி என்னிடம் பேசினார். . (stand at ease).... லேட் ஆகிவிட்டதே! எப்படி போவீர்கள்? ஹாஸ்டலில் பெர்மிஷன்?" என்றார்..
"பத்து மணிக்குள் செல்ல வேண்டும்"
"சரி வாங்க", என்று சொல்லிவிட்டு தன் பக்கத்திலிருந்த கான்ஸ்டபிளிடம் எங்களை பஸ் ஏற்றி விட சொன்னார். கொஞ்ச தூரம் எங்களோடு நடந்து வந்தவர்,
சிரித்துக்கொண்டே "பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இப்படித்தான் என் " மாசியை" முதலில் சந்திதேன்.
அவரை பற்றி முன்னமே தெரியுமானாலும், அதுதான் நான் அவரை முதன் முதலில் சந்தித்தது. செக்ரடேரியட்டில் செக்யூரிட்டி ஆபிஸராக அப்போது அவர் இருந்தார். அதன் பிறகு ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மறு சந்திப்பு. அதிகம் பேசமாட்டார். A MAN OF FEW WORDS...


ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் மாலை என் HOSTEL--லுக்கு வந்தார். அப்பொழுது நான் inter-collegiate ball badminton tournament- Finals- -ல் Ethiraj College -மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். வேடிக்கைப் பார்த்தார். ஜெயித்தே ஜெயித்து விட்டோம்! நேராக எங்கிட்டே வந்து " you are fit to be a police officer's wife"- என்றார்...............அவர் ரசித்தவைகள்....எம்.ஜி.ஆர்...ஆயிரத்தில் ஒருவன் படத்தை --100 தடவைக்கு மேல் பார்த்தேன் என்பார்.பிடித்த இடம்.. ....நாகர்கோவில்.வேலை செய்த 17 இடங்களில் பிடித்த இடம் கோவை. (கோவை மக்களின் மரியாதை கலந்த பேச்சு ரொம்ப பிடிக்கும்)சாப்பாட்டு பிரியர் அல்ல. ஆனால் 'நுங்கு' மிகவும் பிடிக்கும்.Paris-ல் EIFFEL tower-ம், அமெரிக்காவின் நயாகரா Falls பார்த்த போது.. வாழ்க்கையில் அவர் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்துவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டார்..


அவருக்கு மிகவும் பிடித்த பெண்- என் அம்மா.


புத்தக பிரியர்.


மிகவும் பத்திரமாக பாது காத்து வைத்திருந்த பொருள் -- 1975 -ம் வருட என் டைரி...(அதில் நான் அவருக்கென்று ஒரு கவிதை எழுதிருந்தேன். பிற்காலத்தில் என் குழந்தைகள் அந்த டைரியை படித்துவிட்டு mills and boon book படித்த மாதிர்ரியிருக்கிறது என்றார்கள்.)


பிடித்த பாடல்கள் - ரோஜாவில் வரும் ' சின்ன சின்ன ஆசை" & 'டூயட்'-ல் வரும் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாட்டு.


he was very passionate about his police job. அவருடைய royal enfield வண்டிதான் பிடித்த வாகனம்.


எனக்கு 1980 களில் அமெரிக்காவில் settle ஆகும் சந்தர்ப்பம் வந்த போது "வேண்டாமே" என்றார். அவரை பொறுத்தவரை 'அமெரிக்கா' சுற்றி பார்க்க மட்டும்தான்.

தன் குழந்தைகளை நண்பர்களாகவே கருதினார். பெண்கள் independent -ஆக இருக்க வேண்டும்.....


சமையல் தெரியாது. ( குக்கரில் 5 விசில் வந்ததும் ஆஃப் பண்ண சொன்னால், சமையலறையிலே செட்டிலாகிவிடுவார்).


ஒரு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, நிறைந்த வாழ்வை கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.his blog

http://besafeonroads.blogspot.com/

http://masilamani-sachidanandam.memory-of.com/

please visit his blog and also his memorial site.

21st november is his first death Anniversary.

Tuesday, November 6, 2007

Deepaavali wishes !!!


தீபாவளி என்றாலே சந்தோஷம்தான்..........
யாவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
எல்லாரும் தீபாவளி ஜோர்ல இருக்காங்க... ... நானும்தான்...........................

நோயாளி: ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?
டாக்டர்: எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னேன்.

டாக்டர்: உங்களுக்கு நெஞ்சுவலி எப்படி இருக்கு?
ஸ்டெனோ: சுருக், சுருக்னு குத்துது டாக்டர்!

"உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?"

"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க!

சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!"

"என்னது ஆபரேஷன் செஞ்ச டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துட்டாரா?"

"ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சாம்."


"எங்க டாக்டர் ஆபரேஷன் செஞ்சதுல இதுவரைக்கும் மூணு பேருதான் செத்திருக்காங்க."
"அவ்வளவு கெட்டிக்காரரா?"
"அவர் ஆபரேஷன் செஞ்சதே மூணு பேருக்குத்தான்."

"அந்த டாக்டர்கிட்ட போனா மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்கணும்."
"ஏன்?"
"அவரோட ஃபீசை செட்டில் பண்ணினதுக்கப்புறம் அதுதானே முடியும்."

எனக்கு பிடித்த துறை காவல் துறை.......ஆனால் அவர்களைப் பற்றி எத்தனை ஜோக்குகள்!!enjoy!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


"எதுக்காக அந்தத் திருடனை, இன்ஸ்பெக்டர் இந்த அடி அடிக்கிறார்?"
"திருட்டுத் தொழிலை விட்டுடப் போறதா சொன்னானாம்."

"இன்ஸ்பெக்டர் சார், பிளேடு பக்கிரி என் பர்ஸைப் பிடுங்கிட்டு ஓடறான் சார்!"
"பர்ஸ்ல எவ்வளவு பணம் வச்சிருந்தே?"
"எதுக்குக் கேட்கறீங்க?"
"அவன்கிட்டே மாமூலைக் கரெக்டா கணக்குப் பண்ணி வாங்க வேண்டாமா?"

"இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?"
"இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அவர் ஏரியாவுக்கே போயிட்டாங்க."

"எங்க ஊர் போலீஸ், திருட்டுப் போன மறுநாளே திருடனைப் பிடிச்சுடுவாங்க."
"இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீசுக்கு, திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்."

"கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது."
"நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே."
"அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது."

Have a safe and Happy Deepavali! !!

( jokes from MSN)Sunday, November 4, 2007

பட்டாசு இல்லாத தீபாவளிகள்....

என் அம்மா வீட்டில், கிறிஸ்துமஸ்,ஈஸ்டர் தவிர வேறு எந்த பண்டிகைகளும் கொண்டாடமுடியாது. பண்டிகைகள் ஒரு FUN TIME என்று என் அப்பவால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பழங்காலத்து மனுஷன். ஆனால் என் "மாசி"க்கு, எந்த பண்டிகையானாலும் ஓகே தான். அதனால் குழந்தைகள் பண்டிகை நாட்களில் மிகவும் குதூகலமாகவே இருப்பார்கள்.
மாசியால் அதிக நேரம் குழந்தைகளுடன் spend பண்ண முடியாது . இரவு கூட வீட்டிற்கு வர முடியாத நாட்கள் உண்டு.. ஆனால் எப்பொழுதும் அவர்கள் தேவையை நன்றாகவே பூர்த்தி செய்வார்.....

தீபாவளி அன்று நிச்சயம் பட்டாசுகள் உண்டு. விசேஷங்களுக்கு ஏற்ப செய்ய வேண்டிய இனிப்புகளையும் செய்ய வேண்டும். குழந்தைகளின் சந்தோஷம்தான் முக்கியம். பிள்ளைகளுக்கோ அப்பா நல்ல நாட்களில் வீட்டில் இல்லையே என்று ஒரு வருத்தம் இருக்கும்...


1997.. தீபாவளி ..... என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றுதான்.


காஞ்சீபுரத்திலிருந்து 1997 மார்ச் மாதம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு transfer. அதன் பிறகு இரண்டு மாதத்திற்குள் ஜெயம் கொண்டானுக்கு transfer...

அடிக்கடி transfer ......

புது இடம், புது ம்மக்கள்..

நான் திருச்சியிலே தங்கிவிட்டேன். எனக்கு அங்கு வேலை கிடைத்தது. மகன் கோடைக்கானல் ஸ்கூலில் படித்து கொண்டிருந்தான். தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு கிடைக்கவே அவனும் அவன் ஃப்ரண்ட் -ம் திருச்சி வந்தார்கள். அப்பாவிற்கு போன் செய்து எப்ப என்னை பார்க்க வருவீங்க, பட்டாசு வேண்டும் என்று கேட்டான். அவர் " லீவு இல்லை . ஆனால் எப்படியும் வந்து உன்னை பார்த்து பட்டாசு கொடுத்துவிட்டு சென்று விடுவேன்" என்றார்.

நானும் தீபாவளி க்கு முந்தின இரவு night shift -க்கு போய்விட்டேன். இரவு ஒரு மணிக்கு அவர் ஆஸ்பத்திரியில் என்னை வந்து பார்த்தார். வீட்டிற்கு போய் மகனிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு,

உடனே ஆண்டி மடம்(ஜெயம் கொண்டான்) போக வேண்டும் என்றார். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அன்று இரவு புது பட ரிலீஸ் மாதிரி ஒன்பது குழந்தைகள் பிறந்தன.. பயங்கர busy......

கிடைத்த கொஞ்ச நேரம் லேபர் வார்டில் ஒரு குட்டி தூக்கம்... என்னவோ கனவுகள். அவருக்கு accident ஆனது போல்... ..

காலையில் ஆறு மணிக்கு லால்குடி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன்.. அவருக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் என்று.... லால்குடி திருவரங்கத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரமிருக்கும்.... என் 'armada' van -ஐ எடுத்துக்கொண்டு சென்றேன். அவர் வந்த வெள்ளை அம்பாஸடர் கார் லால்குடி ஆஸ்பத்திரிக்கு முன் ... .... முன் பாகம் சிதைந்திருந்தது.. ..உள்ளே பார்த்தேன்.. ஒரே ரத்தம்.. .. கூட்டம் கூட்டமாக மக்கள் காருக்குள் எட்டி பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்... ஒரு போலீஸ்காரர் வந்து என்னை உள்ளே அழைத்து சென்றார்... மாசிக்கு தலையில், .. கையில் எல்லாம் கட்டுகள்... சட்டையெல்லாம் ரத்தம் ...என்னைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு... எங்கிட்டே வந்து மெலிதாக தான் கொண்டு வந்த ' pistol" -ஐ காணோம் என்றார். அவருக்கு அடிபட்ட வேதனையை விட பிஸ்டல் தொலைந்ததுதான் பெரிசாக பட்டது.. நானும் அவரும் ஒரு போலீஸ் துணையுடன் accident ஆன இடத்திற்கு போனோம். ரோடு மிக மோசம்.. ... வலியுடன் வயலுக்குள் இறங்கி அரை மணி நேரம் தேடி கண்டுபிடித்தார். அப்புறம் தான் மனதில் ஒரு தெம்பு.... (வண்டி ஒரு புளிய மரத்தில் மோதி, பின் கதவு திறந்து இவர் வயலில் விழுந்துவிட்டார். அந்த வேகத்தில் பிஸ்டலும் வெளியில் விழுந்துவிட்டது. நல்ல காலம்! தீபாவளியானதால் அந்த பக்கம் யாரும் வரவில்லை) திரும்பி லால்குடி வந்து அங்குள்ள போலீஸ் ஆபிசரிடம் பிஸ்டலை ஒப்படைத்து விட்டு திருச்சி GH சென்றோம் . மகன் தன் அப்பாவை அந்த கோலத்தில் பார்த்ததும் கட்டி பிடித்து கதறினான்... ....(தன்னால்தானே அப்பாவுக்கு accident ஆகிவிட்டது).. அதன் பிறகு CMC -vellore-ல் போய் கையில் #-க்கு அறுவை சிகிச்சை செய்து.. அங்கு இரண்டு வாரம் ........

அந்த தீபாவளிக்கு பிறகு என் மகன் இது நாள் வரை பட்டாசு வெடிப்பதில்லை.

Saturday, October 27, 2007

பிடிச்சா சிரிங்க..

சென்னையில் நல்ல மழை... ஜன்னலை திறந்து வெளியே பார்த்தால்....... பக்கத்து வீட்டு கொய்யா மரத்திலிருந்து சொட்டு சொட்டா தண்ணீர் விழுகிறது... முருங்கை மரத்தில் அத்தனை முருங்கைகாய்கள்.( ம்ம்... இன்று சமையலுக்கு ஒன்றை பறித்துவிட வேண்டியதுதான்..). ..
என் வீட்டில் வேலை செய்யும் அம்மணி வரவில்லை...sunday... ....பாவம்.. அவளுக்கும் இந்த குளிரில் போர்த்திகொண்டு தூங்க வேண்டும் போலிருக்கும்...... எனக்கு சளி பிடித்துக்கொண்டு இருமல்...இந்த மழை நாட்கள் வந்தாலே கஷ்டம்தான். ஒரு வேலையும் செய்ய தோணாது......
internet-ஐ மேய்ந்துக்கொண்டிருக்கும் போது பார்க்க நேர்ந்த சில ஜோக்குகள்...
டாக்டர்களை பற்றி எத்தனை damaging ஜோக்ஸ் வந்தாலும் எனக்கு சிரிக்கத்தான் தோணும்...(most of them are like that only) .ஆனால் நர்சுகளை பற்றி ஜோக்குகள் வந்தால் பிடிக்காது. ஜோக்குதானே என்று அதை தள்ளி வைக்கும் மன பக்குவம் எனக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் படும் கஷ்டங்களை கண்கூடாக பார்ப்பதால் என்னவோ! நான் ரசித்த சில ஜோக்குகளை நீங்களும் ரசிங்களேன்.!!

"நம்ம தலைவர் சுத்த அல்பம்!"
"ஏங்க?"
"அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா என் மனைவிக்கு ஒரு நர்ஸ் பட்டமாவது கொடுங்க. எப்படியாவது என் தம்பிக்கு ஒரு கம்பவுன்டர் பட்டம் கொடுங்கன்னு நச்சரிக்கிறாராம்."


"இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டோவை பார்த்துகிட்டே இருக்கான்."
"அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்கச் சொன்னாங்களாம்."


என்னது! காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆபரேஷன் நடந்துச்சா, கொடுமையா இருக்கே?"
"டாக்டர் வைச்ச தர்மா மீட்டரை முழுங்கிட்டேன். அதான்!"


"டாக்டர் நீங்க இன்னிக்கு ஆபரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பிச்சு ஓடிட்டார்."
"சரி, பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்"


"நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்"
"எப்படி சொல்றீங்க?"
"உங்களுக்கு ஏதாவது ஆபரேஷன்னா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க!"


"டாக்டர் நீங்க ஆபரேஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது!"
"அடடா... என்னோட பொடி டப்பா உங்க வயித்துல தான் இருக்கா?"


"தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுகிறாரே என்ன விஷயம்?"
"அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு."

( ரொம்ப நாளாச்சு தமிழ் மணம் பக்கம் வந்து... என்னை மறந்துடக்கூடாது பாருங்க... அதுக்குதான் இந்த போஸ்ட்.all these jokes are taken from HOT mail)

Thursday, October 11, 2007

வாருங்கள் நடக்கலாம்.!


வாருங்கள் நடக்கலாம்.....

நாளை அக்டோபர் 12 ம் தேதி மிக முக்கியமான ஒரு நாள். ஆர்த்ரைடிஸ் என்கிற நோயால் பீடிக்கபட்டிருக்கும் மக்களுக்கு நாம் உதவலாமே! வாருங்கள்...அவர்கள் கையை பிடித்து நாம் அவர்களை நடக்க வைக்கலாம்.
எலும்பு மற்றும் மூட்டு வலிகளால் அவதிப்படும் மக்கள் அதிகமாக வெளியில் வருவதில்லை. அவர்களுக்கு சில சமயம் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறோமோ என்றே நிறைய பேர் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள்.
எலும்பு மற்றும் மூட்டு தசைஎலும்புகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக உலகம் முழுவதும் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். உலகமெங்கும் வாழும் பல நூறு மில்லியன் மக்களுக்கு வெகு காலமாக தொடர்ந்து இருந்து வரும் மிக தீவிரமான உபாதைக்கும், உடல் ஊனத்திற்கும் முக்கிய காரணங்களாக இந்த குறைபாடுகளே கருதப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய அளவில் நோயாளிகளும், மருத்துவ மற்றும் விஞ்ஞான குழுக்களும் கூடி இந்த குறைப்பாடுகளை பற்றி தேசிய, மாநில, உலக அளவிலான விழிப்புணர்வுகொண்டு வர முயற்சி செய்கின்றனர். அவர்கள் அவர்களால் முடிந்ததை செய்யட்டும். நாம் நம் பங்குக்கு நமக்கு பிரியமானவர்களை அவர்கள் கைபிடித்து அழைத்து செல்வோம்.அவர்களுக்கு ஒரு காக்கும் கரங்களாவோம்.
On World Arthritis Day, people with arthritis from around the world join together to make their voices heard and raise awareness of arthritis.

The aims of World Arthritis Day are:

To raise awareness of arthritis in all its forms among the medical community, people with arthritis and the general public
To influence public policy by making decision-makers aware of the burden of arthritis and the steps which can be taken to ease it
To ensure all people with arthritis and their caregivers are aware of the vast support network available to them.

Tuesday, October 9, 2007

மார்பக புற்றினை பற்றிய புரிந்துணர்தல்!
October is breast cancer awareness month. This is a time when women come together to support and comfort each other through the disease that affects millions of women worldwide. It has been found out that one out of every 23 women will contract breast cancer in her lifetime. Let us unite for our grandmothers, mothers, sisters, aunts, cousins and friends who are fighting the disease. let them not fight the fight alone. let us make them understand we are there to support them.
1) Pay up for a free mammogram for your dear ones...
2 ) coax a friend to get a thorugh breast check up done by an expert.....
3) Send a pink ribbon to your suffering friend or relative to make them understand your support is there.
4) why not try to raise some money for these suffering people and help them to fight out the disease.
As a doctor, as a woman, and above all as a blogger I take this time to let you know that I am always there to help your dear ones if they suffer the disease.

Monday, September 24, 2007

"அபாயத்து பாட்டி"

"அபாயத்து பாட்டி"

அபாயத்து பாட்டியின் பூர்வீகம் எனக்கு தெரியாது. எப்பொழுதும் வெள்ளை சேலை உடுத்திருக்கும் பாட்டியாக மட்டுமே எனக்கு அவரை தெரியும். பாட்டியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரமிருக்கும். வீடு என்றால் பெரீய வீடல்ல... ... ஒரு சின்ன ரூம் மாத்திரமே. எனக்கு நியாபகம் தெரிந்த நாள் முதல் பாட்டி கலையில் ஏழு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். சாயங்காலம் ஆறு மணிக்கு திரும்புவார். காலையில் ஐந்து மணிக்கு எந்திரிச்சு, பக்கத்திலுள்ள கோவிலுக்கு போய் பூசை பார்த்துவிட்டுதான் எங்கள் வீட்டிற்கு வருவார். வந்ததும் அம்மா கொடுக்கும் காபி (கருப்புக்கட்டி காபி) குடித்துவிட்டு வீட்டின் பின் முற்றத்தில் காலை நீட்டிக்கொண்டு உட்காருவார். பின் முற்றத்த்தைதான் எல்லோரும் அதிகம் உபயோகிப்பார்கள். யாரும் ஒரு ரோஜாப்பூவை கூட பறிக்க முடியாது. பாட்டி ஒரு வெற்றிலை இடிக்கும் உரலை எடுத்து வைத்துக் கொட்டை பாக்கை உடைத்து அதை தல்லி மென்னுவது ஒரு அழகுதான். அதற்கு பங்கு போடுவதற்கு நானும் போய் உட்கார்ந்துக்குவேன். அம்மாவிற்கும் பாட்டிக்கும் இதனால் எப்பொழுதும் சண்டை வரும். (செல்லமாக).

என் அக்காவெல்லாம் வெளியூரில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்ததால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி, மதுரை, தூத்துக்குடி, ஆலப்புழா என்று போய்விடுவார்கள். அப்போதெல்லாம் பாட்டிதான் உதவுவார். எங்களுக்கு வீட்டில் காவல் அவர்தான். பெட் ஷீட் குடுத்தாலும் வேண்டாமென்று சொல்லிவிட்டு தன் வெள்ளை சேலையை விரித்து படுத்துக் கொள்வார். காலையில் எந்திரிச்சு கோயிலுக்கும் போவார்.

வருடத்தில் இரண்டு முறை வயல் அறுவடை ஆகும். கதிரடித்து முடிவதற்கு எப்படியும் இருபது நாட்களாகும். அப்பவும் பாட்டிதான் களத்தில்(வீட்டிற்கு பின்புதான் களம்) ஒரு நார் கட்டில் போட்டு, தன் சேலையை விரித்து படுத்திருப்பார். "சூடடிக்க" வரும் குட்டி பசங்கள் அவர் காதில் போட்டிருக்கும் பாம்படத்தை தூங்கும் போது வெட்டி எடுத்துக் கொள்வோம் என்று பாட்டியிடம் வம்பு பண்ணுவாங்க. பாட்டியும் சிரித்து விட்டு ராத்திரி தூங்காம விழிச்சு இருப்பாங்க. வீட்டிலுள்ள எல்லா விசேஷங்களுக்கும் பாட்டி நிச்சயம் இருப்பாங்க. வேலை எதுவும் செய்ய இயலாவிட்டாலும் அவர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. வாய் மட்டும் எப்பொழுதும் வெற்றிலை மென்னுக்கிட்டு இருக்கும்.

அம்மாவிற்கு மாடுகள் என்றால் ஒரு பெரிய passion. பெரிய தொழுவமே உண்டு. புறா கூடுகள், கோழி கூடுகள், love birds... etc.. எல்லாம் உண்டு. பாலை அவர் சொசைட்டிக்குதான் கொடுப்பார். ஆனாலும் சில்லறையாக பால் வாங்க சிலர் வருவார்கள். அப்பொழுதெல்லாம் நாந்தான் பால் ஊற்றிக் கொடுப்பேன். அந்த சில்லரையெல்லாம் எனக்குதான். அதிலிருந்துதான் பாட்டிக்கு நான் பக்கத்து முக்கு கடையில் போய் வெற்றிலை வாங்கிட்டு வருவேன். அதனாலே பாட்டிக்கு என் மேல் ஒரு விருப்பம்.

இந்த மாடுகள் எல்லாம் ரொம்ப உசத்தி மாடுகள். அதனால அப்பா ஒரு சின்ன swimming pool கட்டினார். (மாடுகளை குளிப்பாட்ட). பாட்டி குளி ரூமில் குளிக்காமல் அதில் தான் குளிப்பார். பாட்டிக்கு எப்பவுமே 'உமிக்கரி, கோபால் பல்பொடி' மீது ஒரு வெறுப்பு. வீட்டில அக்காவுங்க எல்லாம்
உபயோகிக்கும் களிம்பு மேல ரொம்ப பிரியம். இப்படித்தான் ஒரு அறுவடை நாளில் பாட்டி குளிக்க போனாங்க. அங்கே இருந்த களிம்பை எடுத்து பல்? தேச்சாங்க. ஒரே நமைச்சல். வாயெல்லாம் வெந்து போய் ஒண்ணுமே பேச முடியாம ... கண்ணெல்லாம் சிகப்பாகி.. யாருக்கும் ஒண்ணுமே புரியல.
பால் கறக்கிற கோனார் பாட்டியை முற்றத்தில் தூக்கிக் கொண்டு வந்து போட்டார். பாட்டியால் ஒண்ணுமே பேச முடியலை. உடனே பக்கத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அங்கு க்ளுகோஸ் எல்லம் ஏற்றி ஒரு வழியாக பாட்டி சாயாந்தரம் கண்ண முழிச்சு பார்த்தாங்க. பாட்டி கூட நாந்தான் ஆஸ்பத்திரியில். அப்பா ஒரே ஏச்சுதான். வயலறுக்கிர நேரத்தில் கிழவி இப்படி உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில படுக்க வேண்டியதாச்சேன்னு. அம்மா ம்ட்டும் எங்கிட்ட பாட்டிய பத்திரமா
பார்த்துக்க சொல்லி கையில் நிறைய காசும் கொடுத்துட்டு போனாங்க. எப்படியோ ராத்திரிக்கு வீட்டுக்கு போய்விட்டோம்.

அடுத்த நாள் காலையில் பாட்டி என்னை மிக ரகசிய்மா கூப்பிட்டு அந்த களிம்பை காண்பித்து " ஏன் கண்ணு , நீங்கல்லாம் இத வச்சு பல் தேய்க்கும்போது ஒண்ணுமே ஆகல எனக்கு மட்டும் ஏன் உதடு வீங்கிடுச்சுன்னு கேட்டாங்க. அப்பத்தான் எனக்கு விஷயமே புரிஞ்சுது. பாட்டி உபயோகிச்சது " பெனிசில்லின் ஆயிண்ட்மெண்ட்". கன்று குட்டிய குளிப்பாட்டி விட்டு அதுக புண்ணுல போடுவதற்காக வாங்கி வச்சிருந்த ஆயிண்ட்மெண்டை பாட்டி உபயோகிச்சுருக்காங்க..பாவம். பாட்டி was allergic to penicillin. எப்படியோ பாட்டி பிளைச்சது கடவுளின் செயல்தான்.

எனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடச்சத பாட்டிக்கிட்ட சொன்னதும் பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் அவங்களை விட்டு விட்டு தொலை தூரம் போறேன்னு கவலை. அம்மாகிட்ட ஒரு பத்து ஏழைங்களுக்கு பாயசத்தோடு சாப்பாடு போட சொல்லி ஆளுங்களையும் கோவிலிலிருந்து அழைச்சுக்கிட்டு வந்தாங்க.

வீட்டில கடை குட்டியான நான் மெட்ராஸ் கிளம்பிற அன்றைக்கு பாட்டிக்கு ஒரே சங்கடம். எங்க compound-ல் குடியிருக்கிறவங்க, வீட்டில வேலை செய்கிறவங்க, அப்பா மில்லுல்ல வேலை பார்க்கிறவுங்கன்னு ஏகப்பட்ட கூட்டம். வீட்டில எல்லா பெண்ணுங்களும் வெளியூருக்கு படிக்க
போயாச்சு. நான் தான் கடைசி.... ஜெபமெல்லாம் செஞ்சு முடிச்சப்பறம், நான் கிளம்பிறச்ச, எனக்கோ ஒரே அழுகை.... புதுசா மெட்ராசுக்கு செல்கிறேன். பாட்டி என்ன பிடிச்சு முத்தம் கொடுத்து கையில் எதையோ அழுத்தினார். அது ஒரு சுருக்கு பை.. அதற்குள் கொஞ்சம் காசு...ஒரு வெற்றிலைக்குள் மடிச்சு கொஞ்சம் தல்லுன வெற்றில பாக்கு....

மூணு மாசம் கழிச்சு அம்மாகிட்ட இருந்து ஒரு கடிதம். அதில் பாட்டி இறந்துவிட்டதாக ..மனசு ரொம்ப கவலையா இருந்துச்சு...பாட்டிக்கு எதற்கு "அபாயத்து பாட்டி" ன்னு பெயர் வச்சாங்கன்னு எனக்கு தெரியாது. பெண் பிள்ளைகள் அதிகம் இருந்த எங்கள் வீட்டில் யாருக்கும் ஒரு அபாயமும் வராமா எங்களையெல்லாம் பார்த்துகிட்டதற்க்காகவான்னு இன்னும் எனக்கு பதில் தெரியல.......

Friday, September 21, 2007

மக்கள்ஸ் கொஞ்சம் சொல்லிகொடுங்க!

I agree that I am an old timer....

எவ்வளவு முன் நோக்கு எண்ணங்கள் இருந்தாலும் இந்த காலத்து இளைஞர்களுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்.

பள்ளிகூடத்தில் படிக்கும் போது லீவு லெட்டர்களும், மாமா கொடுத்த பரிசு பொருளுக்கு நன்றி சொல்லியும் கடிதம் எழுத கற்று கொடுத்தார்கள். கடிதம் எழுதும் முறைகளை நான் கற்று கொண்டேன். கடிதமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையிருந்தது. ஆனால் இந்த ?பத்து வருடங்களுக்கிடையில் என்ன மாற்றங்கள்!

இங்கு சென்னை வந்த பிறகு, அதுவும் இந்த அட்மினிஸ்ட்ரேஷன் வேலை எடுத்த பிறகு எனக்கு தினசரி வரும் மெயில்கள் என்னை ஆச்ச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அடடா... அதுவும் இந்த இன்ட்ரா மெயில்கள் (intra mails)... ...... ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சீனியர்களுக்கும், தங்கள் கீழ் வேலை செய்பவர்களுக்கும் அனுப்பும் மெயில்களை வாசிக்கும் போது உண்மையிலே மெய் சிலிர்க்க்கிறது......
எனக்கு இன்று வந்த ஒரு மெயில் இப்படி ஆரம்பிக்கிறது....
Hi m'm. mtg at 10. plz cme 2 conf hall.
madam என்று டைப் பண்ண எவ்வளவு நேரமாகும்? அதுவும் hi.. ..
இவர்களுக்கு என்று ஒரு dictionary உருவாக்கலாம் போலிருக்குது. ..
fyki- for your kind information.
mtg-meeting.
grtg-greeting... (மறந்து கூட யாரும் நம்பள greet பண்ண மாட்டாங்க :)

wrtcon - with reference telephonic conversation...

மக்கள்ஸ்... கொஞ்சம் சொல்லி கொடுங்க.. இந்த acronyms???---

Wednesday, September 12, 2007

அப்புகுட்டனும் நானும்...

அப்புக்குட்டனை நான் முதலில் சந்தித்த போது எனக்கு பத்து வயது. ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு கொஞ்சம் நாணத்தோடு 'தையா தை' என்று நடனம் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்த போது இந்த நாட்டு புரத்திற்கு ஒரு 'தையா தை' தேவைதானா என்று நானும் என் கூட நடனம் பயின்று கொண்டிருந்த சந்திரிகாவும் ஒரே கிண்டல். எங்களிருவருக்கும் பரத நாட்டியத்தை கரைத்துக் குடித்து விட்டதாக எப்பொழுதும் ஒரு மமதை. கிட்ட தட்ட மூன்று வருடங்களாக நடனம் கற்றும் , அந்த பாம்பு நடனமும், மயில் நடனமும் சரியான படி ஆட எங்கள் இருவருக்குமே வராது.

ஒரு நாள் தவறாது மாலை ஆறு மணிக்கு நடன வகுப்புக்கு அப்பு குட்டன் ஆஜர் ஆகி விடுவான். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் ஒரு அழகு. அதிகம் பேசமாட்டான். எங்கள் வீட்டு பக்கத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில் கம்பௌண்டராக காலையிலிருந்து மாலை வரை வேலை. அதன் பிறகு பரத நாட்டிய வகுப்பு. அவனை எங்கள் வழிக்கு இழுத்து வர ஆறு மாதம் பிடித்தது. இதற்குள் அவன் நல்ல ப்ராக்டீஸ் எடுத்து எங்களை மிஞ்சும் நிலையில் கற்றுக்கொண்டான். 'நாட்டியமே மூச்சு' என்கிற ஒரு வெறி அவனிடமிருந்தது.

மாதர் சங்க நிகழ்ச்சிக்காக நாங்கள் யாவரும் ஒரு நடனம் ஆடுவதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அவன் நடுவிலும் நானும் சந்திரிகாவும் அவன் பக்கத்திலும் ஆடுவதாக இருந்தோம். கடைசியில் சந்திரிகாவின் அம்மா தன் மகள் ஒரு ஆணோடு ஆடக்கூடாது என்று அடம் பிடித்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாது போலாகிவிட்டது...... அப்பு குட்டனுக்கு பயங்கர கவலை. உடனே அவன் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து சந்திரிகாவின் தாயை பார்த்து சமாதானம் பண்ணினான். அன்றுதான் நானும் அவன் அம்மாவை முதலில் பார்த்தேன். ஒல்லியான, குட்டையான தேகம். ஒரு மலையாளிக்குரிய உடை, நெற்றியில் ஒரு சின்ன சந்தன பொட்டு... நிதானமான ஆனால் கெஞ்சின பேச்சு..,..

நாங்கள் காந்தி ஜயந்தி அன்று மாதர் சங்கத்தில் ஆடினோம். எங்களுக்கு சன்மானமாக ஒரு ரூபாய் கிடைத்தது. அவன் அதை மிக பய பக்தியோடு அம்மாவிடம் கொடுப்பதை பார்த்து அவனை கிண்டல் பண்ணினோம்... சிரித்தான்.. முதல் முதலாக தன்னை மறந்த சிரிப்பு .. அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்டதாக அவ்வளவு ஒரு மகிழ்ச்சி. ......

அதன் பிறகும் ஒரு சில நிகழ்ச்சிகள் சேர்ந்து செய்தோம்..எங்கள் வீட்டிலிருந்தும் சந்திரிகா வீட்டிலிருந்தும் யாரும் வரமாட்டார்கள். எல்லா பொறுப்பையும் எங்கள் ஆசிரியை எடுத்து கொள்வார். என் நடன ஆசிரியை எங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்ததால் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஒவ்வொறு நிகழ்ச்சிக்கும் அப்புகுட்டனின் அம்மா வருவார். மகனின் நடன நிகழ்ச்சியை கண்டு களித்து சந்தோஷப்படுவார்.

அந்த காலத்தில் பொண்ணுங்கல்லாம் ஆம்பிள பசங்களோடு பேசக்கூடாது என்று ஒரு விதி. பேசினால் தோலை உரித்துவிடுவார்கள். ஆனால் அவன் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் எங்கள் வீட்டுக்கு விளையாட வருவான். அப்பொழுதெல்லாம் சந்திரிகாவும் வருவாள். விசேஷ நாட்களில் அவன் அம்மா எங்களுக்காக செய்து அனுப்பும் 'அட பிரதமனை' யாருக்கும் தெரியாமல் ஒரு 'செரட்டையில்' ஊற்றி, தென்னை ஓலையால் ஒரு சின்ன 'ஸ்பூன்' செய்து, வைக்கோல் போருக்கு பின் போய் ஒழிந்து சாப்பிடுவோம். மாமரத்து கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம். அப்பா மதியம் சாப்பாட்டுக்கு வரும்போது ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு வருவார். ஒரே ஓட்டம்தான்.

இது மாதிரி ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பு குட்டனின் அம்மா வந்து அவனை 'நாட்டிற்கு' செல்ல வேண்டுமென்று அழைத்துக்கொண்டு சென்றார். இரண்டு மாதம் அவனை காணவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை க்ளாஸ்க்கு வந்தான். சரியாக பேசவில்லை. நடனத்தில் கவனம் இல்லை. அதன் பிறகு எங்களிடம் பேசுவதை குறைத்துவிட்டான். லீவு நாட்களில் வருவதை நிறுத்திக் கொண்டான். ஆனால் எங்கள் டீச்சர் மட்டும் அவனிடம் மிக அன்பாக இருந்தார். எந்த தப்பு செய்தாலும் திட்ட மாட்டார். ஒரு நாள் டீச்சர் வீட்டில் இல்லாத போது, சந்திரிகா அப்பு குட்டனிடம் , 'எடா, என்னாச்சு ' என்றாள். உடனே பயங்கரமாக அழுதான். 16 வயது அப்புகுட்டன் தேம்பி தேம்பி அழுவதை பார்த்ததும் எங்களுக்கு பயமெடுத்துவிட்டது. எப்படியோ சமாதான படுத்தியபோது அவன் 'என்டெ அச்சன் மரிச்சு போயி' என்றான். அவன் அப்பா கொல்லத்தில் கதகளி மாஸ்டரென்றும் அவனுக்கு பத்து வயதாகிருக்கும்போது அவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டார் என்றும் தெரிய வந்தது. அதனால்தான் பிழைப்பதற்காக எங்கள் ஊருக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அச்சனை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் அவருக்காகவே அவன் பரத நாட்டியம் வகுப்பில் சேர்ந்ததாகவும் சொன்னான். மாதா மாதம் அவர் அவனுடைய செலவுக்கு பணம் அனுப்புவாரென்றும், நிறைய சொத்துக்கள் கொல்லத்தில் உண்டும் என்று சொன்னான். இங்கு வேலை பார்க்கும் பணம் வீட்டு வாடகை கொடுக்க மாத்திரம்.

கொஞச நாளில் நான் டான்ஸ் க்ளாசுக்கு போவதை நிறுத்திவிட்டேன். எப்பவாது அவன் வேலை செய்த ஆஸ்பத்திரிக்கு உடம்பு முடியாமல் போனால் மட்டும் அவனை பார்ப்பேன். அவன் நல்ல பரத நாட்டிய கலைஞனாகினான். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான். மருத்துவ கல்லூரிக்கு போன பிறகு இதெல்லாம் மறந்தே விட்டது.

ஒரு தடவை நானும் மாசியும் எங்கள் ஊரிலிருந்து கொல்லம் போயிருந்த போது அப்பு குட்டன் வீட்டுக்கு சென்றோம். (என் தம்பியிடம் நல்ல பழக்கம் ). வீட்டை பார்த்ததும் அசந்தே விட்டோம். அவன் அப்பா வாழ்ந்த வீடு. அவர் இறந்த கொஞ்ச நாட்களில் அவரோடு கூட வாழ்ந்த பெண்மணியும் தவறி விட்டார். அப்பாவிற்கு பிடித்த பரத நாட்டியத்தை அங்கு கற்று கொடுப்பதாக சொன்னான். திருமணம் செய்ய போவதில்லை என்றான்.. அவன் அம்மா மிகவும் மெலிந்து காணப்பட்டார். கொல்லத்திற்கு வந்ததிலிருந்து குடி பழக்கம் வந்து விட்டதாக கூறி, மாசியிடம் அவனுக்கு அட்வைஸ் பண்ணும் படி சொன்னார். இரண்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்த போது மிக பாசத்தோடு கவனித்துக்கொண்டான். அடை பிரதமனும் செய்தார். முதன் முதலில் காலில் சலங்கை கட்டிய அன்று உடுத்தியிருந்த பட்டு வேஷ்டியையும் அந்த சலங்கையும் கொண்டு வந்து காண்பித்து பழைய நினைவுகளை அசை போட்டான்..... மாசிக்காக சில நாட்டிய முத்திரைகளை சொல்லிக்கொடுத்தான்.

1990 களில் நாங்கள் வேலூரிலிருந்த போது அவன் அம்மாவிற்கு மார்பு புற்று நோய்க்கு சிகிச்சை செய்வதற்காக வந்த போது மாசி அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார். எதிர்பாராத விதமாக அவன் அம்மா வேலூரிலே இறந்துவிட்டபோது ஆம்புலன்ஸ் arrange பண்ணி பத்திரமாக செல்ல எல்லா ஏற்பாடும் செய்து கொடுத்தார். ஆம்புலன்ஸில் ஏறும் போது அவன் மாசியின் கையை பிடித்து அழுதது..........

நாங்களும் ஊர் ஊராக சுற்ற வேண்டிய சூழ்நிலை. அவனை மறந்தே விட்டேன். ஆனாலும் சில சமயங்களில் தூர்தர்ஷனில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் ஒளி பரப்பும் போது அவன் நியாபகம் வரும். அப்புறம் மறந்து விடும்.

இன்று காலையில் 'அப்பு குட்டனை' ஆஸ்பத்திரி லாபியில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. அவன் தான் என்னை முதலில் பார்த்து என் desk-க்கு வந்தான். மெலிந்து சதை எதுவுமில்லாமல்.... அப்படி ஒரு பரிதாபம்... 'பீடிவலித்து'-ம் 'சாரயம்' குடித்தும் குடலிலும், ஈரலிலும் புற்று வியாதி. அதற்கு மேல் hepatitis- B - -ம் சேர்ந்து கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர். திருவனந்தபுரத்திலுள்ள புற்று நோய் மையத்தில் சிகிச்சை எடுத்து ஒரு பயனுமில்லை. இங்கு சிகிச்சை செய்ய வந்திருக்கிறான். கை கால்களெல்லாம் உதரல். நிற்க இயலவில்லை. எப்படி பட்ட ஒரு நடன கலைஞன்... தாம்பாளத்தில் ஒற்ற காலில் எப்படி நின்று ஆடுவான்.. .. ஆனால் இன்று......

மாசி இறந்துவிட்டதை பற்றி சொன்னதும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். என் கண்களிலும் கண்ணீர். எதுவும் பேச முடியாத ஒரு இடத்தில் நான்.......

THE WORLD IS SO SMALL.....


புகை நமக்கு பகை.......

குடி எல்லாவற்றையும் கெடுக்கும்.....

CHANGE YOUR LIFE STYLE TO PREVENT CANCER.

Monday, September 10, 2007

புகை உடலுக்கு பகை.....

புகை உடலுக்கு பகை........
என் பங்குக்கு சில டிப்ஸ்...புகை பிடிப்பதை நிறுத்த ப்ளான் பண்ணியதும் முதலில் நம் குடும்பதிலுள்ள மக்களின் உதவியையும், புகை பிடிக்காத நண்பர்களின் உதவியையும் நாடலாம்.தினசரி உடற் பயிற்சி செய்வதால் புகை பிடிக்கும் எண்ணம் மாறிவிட நிறைய வாய்ப்பு உண்டு. புகை பிடிப்பதை நிறுத்தும்போது சில symptoms உண்டாகும். அப்பொழுது பாசிட்டிவாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். புகை பிடிக்க ஆசை வரும்போது அந்த ஆசையை ஒரு சில நிமிடங்கள் தள்ளி போடலாம். அந்த நேரங்களில் ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்கலாம். அதே நேரம் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறுங்கள்.. வேறு ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நினைத்து பார்க்கலாம். நல்ல பெரீய மூச்சாக எடுத்து விடவும். சிகரெட்டுக்கு ஆகுமான செலவை தனியாக எடுத்து வைப்பீர்களானால் அது ஒரு பெரிய சேமிப்பாகுவதை காணலாம். புகை பிடிக்க தோன்றுகிற நேரத்தில் "கம்"போன்று ஏதாவது சுவைக்க முயற்சி செய்யவும்.ஒரு நாளைக்கு ஒன்று என்று கணக்கு வைத்து சிகரெட்டை பிடிக்கவும். சிகரெட் இல்லாத ஒவ்வொறு நாளும் நமக்கும், நம் குடும்பத்தார்க்கும் நல்லது என்று சந்தோஷமாக நினைப்போம். நமது சேமிப்பு(SAVINGS) அதிகமாவதை பார்த்து சந்தோஷப்படலாம்.அதில் மிச்சம் பிடித்த பணத்தை வைத்து மனைவிக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கிக் கொடுக்கலாமே.!

(டிஸ்கி) நானும் ஒரு டிஸ்கி போடறேன்..இந்த போஸ்ட் யாருக்கு டெடிக்கேட் பண்ரேன்னு தெரியுமா?.. என்னை ரொம்ப கலாய்க்கிற ஒரு சக்கரவர்த்திக்குத்தான். கண்டு பிடிங்க பார்ப்போம்!

Monday, August 27, 2007

*""Need your Brains"""*

என்ன தலைப்பை பார்த்து மலைப்பா? ஆமாங்க! ஆமா! பின்ன நம்ம மூளை சரியா இருந்தாத்தானேங்க நமக்கும், மற்றவர்களுக்கும் இந்த சமூகத்திற்கும் நாம் உதவியாக இருப்போம்! சரி.. ...
சொல்ல வந்தது என்னவென்றால் நம்ம software companies-ல் வேலை பார்க்கும் professionals எல்லாம் நிரம்ப புத்திசாலிகள். நிறைய பேர் campus interview -ல் பெரீய கம்பெனிகளில் வேலை கிடைத்து, மாதம் 50,000/- க்கு மேல் சம்பளம் வாங்குறாங்க. வெளி நாட்டிற்கு வேற செல்றாங்க. கடந்த ஐந்து வருடத்திற்குள் இந்த ஐ.டி நிறுவனங்கள் அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளன. டாக்டராகணும்னு இப்ப யாரும் அதிகமாக கனவு காண்பதில்லை...இது ஒரு healthy situation தான். மறுப்பதற்கில்லை. இந்த இளைஞர்களை பாதுகாப்பது எப்படி?சென்னையில் நான் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் என்னை அதிர வைக்கின்றன. tidel park IT road-ல் நம்ம software engineers, BPO Employees போகும் வண்டிகள் (cabs) எவ்வளவு வேகத்தில் செல்கின்றன தெரியுமா? ஒரு நாள் தவறாது ஏதாவது கம்பெனியை சார்ந்த வண்டி ஆக்ஸிடண்டாகி நிற்கின்றன. BPO Employees பாதி தூக்க கலக்கத்தில் செல்வதை பார்க்கிறேன். சில cab - களில் அளவுக்கு அதிகமாக பயணிப்பவர்களும் உண்டு. காலையில் ஒருநாள் இப்படி பயணம் செய்த ஒரு அழகு பெண்மணிக்கு திடீரேன்று ப்ரேக் போட்டதால் உதடு கிழிந்து, பற்கள் உடைந்து......பாவம் பார்க்கவே பரிதபமாக இருந்தது. இன்னொறு நாள் ஒரு பெரிய BPo நிறுவனத்தின் employee க்கும் இப்படித்தான் நல்ல அடி.. நெற்றியில் தையல் போடப்பட்டது. எதனால் இப்படி நடக்கிறது? employees எல்லாம் அதிகமாக city-ல் தான் வசிக்கிறார்கள். இரவு ஷிஃப்ட் முடிந்து காலையில் செல்லும் பொழுது தூக்க கலக்கத்தில் செல்கிறார்கள். தங்கள் வண்டியின் ஓட்டுனர் மீது அதீத நம்பிக்கை.. ஆனால் ஓட்டுனரோ ஏதோ ஆடு மாடுகளை ஓட்டி செல்வது போல் அத்தனை வேகம். cycle gap-ல் புகுந்து நெளிந்து ஓட்டி செல்கிறார்கள். பெரீய கன்சல்டன்ஸிகள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை பேரூந்துகளில் pick up செய்கிறார்கள். நம்ம பல்லவன் ஊர்தி ஓட்டுநர்கள் எவ்வளவோ தேவலாம். பேரூந்து நிறுத்தத்தில் நிறுத்தி நம் மக்களை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் இந்த software கம்பெனி பேரூந்துகளோ நட்ட நடுக்க நிறுத்தி நம்ம இளம் engineer களை ஏற்றி செல்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் நிற்கும் இந்த ஊர்திகளுக்கு எழுதாத சட்டம் இது......

"இந்த வண்டி 45 km வேகத்திற்கு மேல் சென்றால் இந்த நம்பருக்கு தொலை பேசுங்கள்" என்றிருக்கும். ஆனால் அந்த நம்பரில் பாதி அழிந்து போயிருக்கும்.

"topnotch techie traveling" என்று சில வண்டிகளில் எழுதியிருக்கும். இந்த வண்டிகள் கொஞ்சம் பொறுமையாக போவதை பார்த்திருக்கிறேன். (ஒரு வேளை அம்பாஸ்ஸடர் கார் என்பதாலோ?)

சென்ற வாரம் ஒரு நாள் எமர்ஜன்சியில் பயங்கர கூட்டம். எல்லாம் 24, 25 வயது தம்பிகள்தான். ஆளுக்கொரு செல் போனை வைத்துக்கொண்டு பதட்டமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவங்க ஒரு பெரிய software கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். தங்களுடன் வேலை பார்க்கும் மூகர்ஜீ இரவு ஒரு மணிக்கு வேலை முடித்துவிட்டு தன் இரண்டு வாகன சக்கிரத்தில் வீடு திரும்பும்போது பீச் ரோடில் ஒரு மின்சார கம்பத்தில் மோதி கீழே விழுந்துவிட்டார்.

உடனே பொது மருத்துவ மனைக்கு கொண்டு போய் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தார்கள். இரத்த சேதம், முகத்திலுள்ள ஒரு எலும்பு விடாமல் fracture. தோல் தேய்ந்து இரத்தம் ....

ICU-ல் admission. மூளைக்குள் இரத்தம் கட்டிவிட்டது. இவர் கூட வேலை செய்பவர்களெல்லாம் வருத்தத்தில்.. மூகர்ஜி ரொம்ப புத்திசாலி என்று சொல்வதை கேட்க முடிந்தது. icu -விற்குள் அனுமதி மறுத்ததால் ஒரே சப்தம்.. .. கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பா மூகர்ஜி மதியம் கொல்கட்டாவிலிருந்து வந்தார். மகனுக்கு இவ்வளவு அடிபட்டு இருக்கும் என்று நினைக்கவில்லை போலும்.

முதலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நினைத்த senior consultant , அப்புறம் medical treatmnet செய்யலாம் என்று முடிவு செய்தார். உடைந்த எலும்புகள் யாவும் wire வைத்து சேர்த்தனர். முகமெல்லாம் தையல்கள். அப்பா மூகர்ஜியை சக ஊழியர்கள் சமாதான படுத்தினார்கள். ஆனாலும் அவர் ஓர் ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். முகர்ஜி வேலை செய்யும் நிறுவனம் தன் பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது. பொருட் செலவு பற்றி கவலை இல்லை. எப்படியும் குணமாக 21 நாட்கள் ஆகிவிடும். 21 நாட்கள் கழித்து வெளியில் வரும்போது இந்த மூளைக்கு எந்த தாக்கமும் இருக்க கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டேன்.

எனக்கு புரியாதவைகள் சில.

* ஏன் இந்த cab driver கள் இவ்வளவு வேகமாக செல்கிறார்கள்?

* ஏன் நம்ப software employees வீட்டை விட்டு லேட்டாக கிளம்புகிறார்கள்?அதனால் தனே இந்த காரோட்டிகள் இவ்வளவு வேகமாக செல்கிறார்கள்.

* இந்த கம்பெனிகள் தங்கள் contract-ல் இருக்கும் ஓட்டுநர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் traffic rules -m அறிவுரைகளும் சொல்வதில்லையா?

மக்களே!

the country needs your "BRAINS" !!!!!!!!

Friday, August 24, 2007

ஒரு வீக் எண்ட் பதிவுதான்.!

எங்க absent minded professor இன்றைக்கு எங்களை ஒரு வழியாக்கிவிட்டார்.
சுனாமி மாதிரி வந்தார்...ஒரு பேஷண்ட் பார்த்தார்....
அதற்குள் I.C.U.-லிருந்து ஒரு போன் ....லிப்ட்டுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த இரண்டாவது நிமிடம் I.C.U......
நிறைய நேரம் புரபசரை காணவில்லையே என்று secretary-க்கு கவலை.....
எப்பொழுதும் போல் செல் போனில் தேடல்...
ஆஹா எங்க புரபசர் ஒரு பொடி நடையா வீட்டுக்கே போய் சேர்ந்துவிட்டார்.....
நடந்தது இதுதான்...
இன்றைக்கு டாக்டரின் கார் டிரைவர் லீவு. ஆகவே அவரே தனியா காரை ஓட்டிவிட்டு வந்தார்.. காரையும் மறந்து பேஷண்டையும் மறந்து வீட்டுக்கு போய் விட்டார்...
ஆனால் இந்த வயதிலும் இவ்வ்வ்வ்வ்வ்வளவு சுறுசுறுப்பாக யாரையும் பார்க்க இயலாது...
OK. Have a safe week end! safe Driving too!

Sunday, August 19, 2007

என் பார்வையில்...மருத்துவ காப்பீடுகள்.-1

என் பார்வையில்... மருத்துவ காப்பீடுகள்..

நமக்கு சேவை செய்வதற்காக நிறைய தனியார்

காப்பீட்டு நிறுவனங்களும், government owned

நிறுவனங்களும் உள்ளன.

சில Government owned நிறுவனங்கள்:

1) நேஷனல் இன்சூரன்ஸ்

2) யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ்

3 ) நியூ இந்தியா இன்சூரன்ஸ்

4)ஓரியண்டல் இன்சூரன்ஸ்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்:

ICICI Lomabrd Health Insurance

The Cholamandalam Health Insurance.

Royal sundaram Insurance

The Star Allied Insurance.

The Reliance Insurance Company.

Bajaj Allianz Insurance Company.

Tata AIG Insurance.

சரி.. இப்ப தனி காப்பீடு திட்டம் பற்றி ......

ஆரம்பத்தில் நிறைய பேர் இந்த திட்டத்தில்தான்

சேர்ந்திருந்தார்கள். (இப்பவும் கூட). இதன் மூலம்

கட்டும் ப்ரீமியத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு.

அதற்காகவே எடுத்த mediclaim நிறையபேருக்கு

தற்சமயம் உதவுவதை பார்க்கிறேன்.

10 - 15 வருடத்திற்கு முன்பு வரி விலக்குக்காக

எடுத்தவர்களுக்கு தற்சமயம் அது நிறைய போனசோடு

உதவுகிறது. தனி காப்பீடில் நிறைய exclusions உண்டு.

அதாவது சில நோய்களுக்கு இந்த பாலிஸி பாதுகாப்பு

கொடுக்காது. பிரசவம், பிரசவத்திற்கப்பால் உண்டாகும்

கஷ்டங்கள், பிறக்கும் போதே உள்ள குறைகள், நோய்கள் etc..

FAMILY INSURANCE
குடும்பத்திலுள்ள யாராவது ஒருத்தர் குடும்பத்திலுள்ள

ஏனைய அங்கத்தினர்களுக்காக எடுக்கும் பாலிஸி இது.

நான் பார்த்தவரை, வீட்டின் தலைவர் தனக்கு 3 லட்சத்திற்கும்,

தன் மனைவிக்கு 2 லட்சத்திற்கும், குழந்தைகளுக்கு

தலா 50,000 த்திற்கும் எடுத்திருப்பார்.

(அது ஏன் தனக்கு மட்டும் அதிக தொகையில்

இன்சூர் பண்ணிக்கொள்கிறார் என்று அடிக்கடி

நான் யோசிப்பது உண்டு). இந்த பாலிசி சிறந்த

முறையில் உதவுகிறது. திடீரென்று குழந்தைக்கு

முடியாமல் போய்விட்டால், சில இன்சூரன்ஸ்

கம்பெனிகள் மற்ற குடும்ப அங்கத்தினரின்

INSURED AMOUNT- லிருந்து பணம் கொடுத்து உதவும்.

THIS IS KNOWN AS FLOATER POLICY.

இந்த விதமான பாலிசி எடுப்பது மிகவும் நல்லது.

இதரற்கும் வருமான வரி விலக்கு உண்டு.


CORPORATE INSURANCE: ..(தொடரும்)

Friday, August 17, 2007

இன்று நான் சந்தித்த இரண்டு நிகழ்ச்சிகள்

லிப்டுக்காக காத்துக்கொண்டிருந்த போது சந்தித்தவைகள்...

ஏழு வயது பையன்..... அறுவை சிகிச்சைக்காக.. stretcher-ல் படுக்க வைத்து அழைத்துச்செல்லும்போது, மிக கவலையோடு சுற்றி நின்றுக்கொண்டிருந்த தன் பெற்றோர்களை பார்த்துவிட்டு பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த தன் தங்கையை பார்த்து, 'நன்னா ( செல்லமாக கூப்பிடும் பெயர் போலும்) நான் ஒரு வேளை ஆப்பரெஷன் பண்ணும்போது சாமிக்கிட்ட போய்ட்டேன்னா அம்மாவையும், டடாவையும் நல்லா பார்த்துக்கோ. இல்லேன்னா நான் சாமிக்கிட்ட போய் உன் கண்ண பிடுங்க சொல்வேன்"
குழந்தைகளால் எப்படி இப்படி பேச முடிகிறது? டி,வி-ன் தாக்கமா? அல்லது வீட்டு பெரியவர்கள் பேசுவதை கேட்டா?

இந்த மனிதரைப் பார்க்கும்போது கொஞ்சம் திடகாத்திரமாத்தான் தெரிந்தார்.... ஆனால் வாயில் புற்று நோய்.. ...radiation-க்காக காத்துக்கொண்டிருக்கும் போது மனைவி , " உங்கிட்ட எத்தனதடவை சொல்லிருப்பேன்யா.. அவனோடு சேராதன்னு..அவனா இப்ப இங்க வந்து உனக்கு help பண்ண போறான்.. ரொட்டி துண்ட பார்த்த நாய போல வால ஆட்டிக்கிட்டு போனே.. .....என்ன ஆட்டம் ஆடின....இப்ப பாரு இப்படி குந்திக்கிட்டு இருக்க..... உனக்கு நல்ல வேணும்யா.." கணவர் ஒன்றும் பேச முடியாது மனைவியிடமிருந்து தண்ணீரை வாங்கி குடிச்சுகிட்டு, கண்ணீர் விட்டார்....
என்னத்த சொல்ல?

Tuesday, August 14, 2007

பாகிஸ்தான்...

இன்று சுதந்திர தினம் காணும் பாகிஸ்தானுக்கு நான் 1985-ல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மாசியும் செல்வதாகத்தான் இருந்தது. ஆனால் மாசிக்கு விசா மறுத்துவிட்டார்கள். (போலீஸ் என்பதால்). ஆகவே நான் மட்டும் தனியாக தில்லியிலிருந்து லாகூர் சென்றேன். போகும் போது இந்தியன் ஏர்லைன்ஸில் செல்லும் பெரும் பாக்கியம் கிடைத்தது. தனியாக சென்றதால், எனக்கு விமானத்தின் முன் பகுதியில் பயணம் செய்த பெண்களுடன் இருக்கை கிடைத்தது. எங்கள் இருக்கைக்கும் ஏனைய பயணிகளுக்குமிடையில் ஒரு பெரிய ஸ்க்ரீன் இருந்தது. பெண் air- hostess தான் எங்களுக்கு பணிவிடை செய்தாள். சரியாக 55 நிமிட பயணம். லாகூர் ஏர் போர்ட் மிக நன்றாக இருந்தது. பர்டா(purdah) போட்ட பெண்கள்தான் immigration -ல் இருந்தார்கள். பெண்களுக்கு என்று தனி வரிசை..... மிகவும் சுலபமாகவே வெளியே வர முடிந்தது. நான் ஒரு 5 நட்சத்திர hotel- புக் பண்ணியிருந்தாலும் அங்குள்ள ground hostess நான் தனியாக வந்திருந்ததால் என்னை பத்திரமாக YWCA செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தார்.

ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் போது சாயாங்காலம் 5 மணி இருக்கும். சீதோஷ்ணம் நம்ம தில்லி மாதிரித்தான் கூலாக இருந்தது. HINDI பேசிய ஒரு நல்ல பாகிஸ்தானி ட்ரைவெர். பத்திரமாக கொண்டு சேர்த்தார். ஒரு காசு கூட மேலே கேட்காமல் ymca- உள்ளே வந்து என்னை அங்கேயுள்ள பெண்களுடன் அறிமுகப்படுத்தினார். எனக்கு ஒரு தனி ரூம் கொடுத்து தங்குவதற்குறிய ஏற்பாடுகளெல்லாம் பண்ணினார்கள். நல்ல பிரியமான மக்களை சந்திக்க நேர்ந்தது. நான் தங்கியிருந்த YWCA-ல் ஒரு ஸ்கூல் . பாட திட்டங்களெல்லாம் அவர்கள் தாய் மொழியில் தான். நிறைய முஸ்லிம்களுக்கு இடையில் ஒரே ஒரு இந்துமத பெண்ணையும் ஒரு கிறிஸ்துவ மத பெண்ணையும் பார்க்க முடிந்தது . ஆனால் பெயரெல்லாம் முஸ்லிம் பெயர் தான்.. சாலைகளில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி ஏந்திய மிலிட்டரி போலீஸ். ரொம்ப பயமாகவே இருந்தது.

என்னோடு கூட வந்திருந்த டாக்டர் ஒருத்தர் வேறு HOTEL-ல் தங்கியிருந்தார். நானும் அவரும் மாலை வேளையில் hotel-ல் சாப்பிட போன போது இரண்டு பேரும் தனி தனியாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சாலைகளின் அமைப்பும் கட்டடங்களும் அப்படியே தில்லி மாதிரிதான் ... சீதோஷ்ணமும் ஒரே மாதிரிதான்...'மீட்' என்று மாட்டிறைச்சி கொடுத்தார்கள். அதன் பிறகு மீட் சாப்பிடவே இல்லை. பழைய லாகூர் சென்று நிறைய பழங்களும், பாதாம், முந்திரி, பிஸ்தா வாங்கினேன். அங்குள்ள க்ரிக்கெட் மைதானத்தையும் பார்க்க முடிந்தது. நம்ப ஊர் மாதிரி ரிக்ஷாக்களும் உண்டு. பெண்கள் ஏறுகின்ற வண்டிகளில் ஆண்களுக்கு அனுமதியில்லை.

கன்டோன்மென்ட் பக்கம் செல்லும் எல்லா பயணிகளையும் கடுமையான சோதனை.. இந்திய பெண் என்றதும், சுத்தமாக அனுமதி கிடைக்கவில்லை.

ஒரு வார காலம் தங்கிருந்தேன்.... அங்குள்ள பெண்கள் மிக அன்பாக பழகினார்கள். நிறைய படங்கள் எடுத்துக்கொண்டோம். மாசிக்கு நான் எப்படி இருக்கிறேனோ என்று பயம். ஆனால் ஒரு தந்தியோ, போனோ போட முடியவில்லை. நான் ட்ரங்க் கால் புக் பண்ணி மணி கணக்கா காத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. 'எதற்கு, ஏன்' என்று அத்தனை கேள்விகள். கடைசியில் பேச கூட முடியவில்லை. நான் அவருக்கு எழுதிய கடிதங்களும், பிக்சர் போஸ்ட் கார்டுகளும் கூட நான் இந்தியா வந்து சேர்ந்த பிறகுதான் கிடைத்தது. ஒரு வாரம் கழித்து தில்லி வந்து இறங்கிய போது மனதில் ஒரு ஏக்கம்.......

திரும்பி ஒரு தடவை போய் பார்க்க விரும்பும் நாட்டில் நிச்சயமாக
பாகிஸ்தானும் ஒன்று..

Thursday, August 9, 2007

என் பார்வையில்.... மருத்துவ காப்பீடுகள் - 1

ரொம்ப நாளா இன்சூரன்ஸ பற்றி எழுதணும்னு

தோணிச்சு. மக்கள் படும் கஷ்டங்கள்

வேதனைகள், கோபம், பிரச்னைகள்.. ...

இதெல்லாம் தினம் தினம் சந்திக்கும் போது

ஏண்டா, மனுஷ வாழ்க்கைன்னு இருக்கும்......

நோயால் கஷ்டப்படுவது ஒரு பக்கம்

என்றால், அதற்கு செலவு செய்ய வழியில்லாமல்

திண்டாட்டம்..சிலர் கடன் வாங்கி வைத்தியம்

பண்ணுகிறார்கள். சிலர் வீடுகளையும்,

தோட்டங்களையும் விற்றுவிட்டு வந்து

ஆஸ்பத்திரியே கதி என்று இருக்கிறார்கள்.

ஒரு சிலரிடம் மாத்திரமே இன்சூரன்ஸ் உண்டு.

நம்முடைய வாழ்க்கை

முறை மாற மாற, நிறைய

நோய்கள் வருகிறதா? அல்லது இந்த

நோய்களை கண்டு பிடிக்க் புது புது


டெக்னாலாஜி வந்திருப்பதலா?

எதுவாகினும் நம் வீட்டில் யாராவது

படுத்துவிட்டால் மொத்த குடும்பமும்

கதி கலங்கி போய் விடுகின்றனர்.

சந்தோஷமாக இருந்த வீடு கலகலப்பற்று

போய் விடுகிறது.

நாம் புத்திசாலிகளாக இருந்தால்

நாம் பிற்காலத்தில் யாரையும் பண செலவு

செய்ய எதிர்பார்க்காமல், நம்முடைய

வைத்திய செலவுகளை நாமே பார்த்துக்கொள்ளலாம்.

நமக்கு மட்டுமல்ல நம்முடைய பெற்றோர்கள்,

மனைவி ,குழந்தைகள் யாவருக்கும்

தேவைப்படும் வைததி்ய செலவுகளை

பார்த்துக்கொள்ளலாம். மருத்துவ காப்பீடு செய்வது

ஒரு வகையில் சேமிப்பு மாதிரி.

ரூ30,000 முதல் 5 லட்சம் வரை நாம் காப்பீடு

செய்துக்கொள்ளலாம். சில பெரீய கம்பெனிகளில்

ஒரு லட்சத்திற்கு மேல் தான் பாலிஸி எடுக்க முடியும்.

91 நாள் குழந்தையிலிருந்து 60 வயது வரை

இன்சூர் பண்ணிக்கொள்ளலாம்.

இரண்டு விதமான காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன

ஒன்று தனிகாப்பீடு ( individual insurance),

அடுத்தது குழும காப்பீடு.

தனி காப்பீடு திட்டத்தில், தனி மனிதர் மாத்திரமே

இன்சூர் பண்ணிக்கொள்ள முடியும்.

குழும காப்பீடு திட்டத்தில், குடும்பத்திலுள்ள

அனைவரும் இன்சூர் பண்ணிக்கொள்ளலாம்.

(அதாவது, கணவர், மனைவி, தங்கள் பெற்றோர், பிள்ளைகள்) .

கட்டும் ப்ரீமியம் அதிகமாக இருக்கும்.

குடும்பத்திலுள்ள ஏதாவது ஒரு அங்கத்தினர்

எல்லோருக்கும் ப்ரீமியம் கட்டுவார்.

குழும காப்பீடின் கீழ் நிறுவனங்களின்

காப்பீடுகள் வருகின்றன....

நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும்

பணியாளர்களுக்கும் அவர்களுடைய

குடும்பத்தினருக்கும் காப்பீடு செய்துக்கொள்கின்றன.

(தொடரும்)

Wednesday, August 8, 2007

மருத்துவ காப்பீடுகள்..

"டாக்டர்தானா ?"

"ஆமாம்"'.

" நான் பாண்டிசேரியிலிருந்து சேகர் பேசுகிறேன்.

எனக்கு இடுப்பு எலும்பில் ஒரு ஆப்பரேஷன் செய்யணும்'


"ஓ!.... சரி, நீங்க தவறுதலாக என் நம்பருக்கு வந்துட்டீங்க..

நான் உங்களை எலும்பு சிக்ச்சை பிரிவுக்கு கனெக்ட் பண்ரேன்"

"இல்லை, இல்லை, நான் உங்களோட தான் பேசணும்.

எனக்கு இன்சூரன்ஸ் இருக்குது,


அதற்கு apply பண்ணணும். அது ஓகே ஆனதும் தான் ஆப்பரேஷன்"

" ம்ம். சரி, நான் கீழே insurance help desk இருக்குது. அங்க connect பண்றேன் "

" இல்ல மேடம், அவங்களுக்கு சரியா விபரம் சொல்லதெரியலை."

" சரி.. சொல்லுங்க,"

"ஒன்றுமில்லை மேடம், இடுப்பு எலும்பில் ஒரு ஆப்பரேஷன் பண்ன

சொல்லியிருக்கிறார் எங்க குடும்ப டாக்டர்.

அதற்கு 35,000 ரூ ஆகும் என்றார்.


எனக்கு இன்சூரன்ஸ் இருக்கு அதுதான்.........

அங்கு சென்னையில் பண்ணலாம் என்று...'


" சரிங்க..... no problem .. எந்த இன்சூரன்ஸ் கம்பெனிங்க?"

'ICICI LOMBARD' (ஆஹா...icici...... நமக்கு ஆப்புத்தான்.

ஆனால் சொல்லும்போதே அவருக்கு ஒரு குதூகூலம்.)

" எப்ப எடுத்ததுங்க?"

"ஒரு மாசம் ஆச்சு மேடம் ( என்ன சந்தோஷம்......).

ஒரு மாசம் கழிச்சு, ஆஸ்பத்திரியில் எதுக்கு

வேணும்னாலும் treatment எடுக்கலாம்னு சொன்னாங்க"


"ம்ம்ம்.. எப்படி எடுத்தீங்க? on line?"

" இல்ல மேடம்...call center.....அவங்க என் மொபைல் நம்பரில் கூப்பிட்டு

medi claim பண்ணிக்கிறீங்களான்னு கேட்டாங்க. ..எங்கிட்ட எல்லா காப்பியும்

இருக்குதுங்க."


( .. அய்யோ பாவம்..)

"இல்ல சார்... ப்ரீமியம் கட்டி குறைந்தது ஒரு வருஷமாவது ஆகணும்.

அதுவும் நீங்க ப்ரீமியம் எடுப்பதற்கு முன்பே இப்ப உள்ள நோய் இருந்தால்

இன்சூரன்ஸ் மூலம் cashless கிடைப்பது கஷ்டம்"

" மேடம், என்ன நான் இளிச்ச வாயனா?

உங்க கிட்ட இந்த வியாதி மூன்று மாசத்திற்கு முன்பே

இருக்குன்னு சொல்ல.. இப்ப இரண்டு நாளுக்கு

முன் தான் எனக்கு வலியே ஆரம்பிச்சுது""


"ஓஹோ.. சரி.. ஆனால் உங்களுக்கு இதற்கு இன்சூரன்ஸ் கவர்

கிடைக்காதுங்க. ப்ரீமியம் கட்டி ஒரு வருடமாவது ஆகணுமே!"

" என்ன மேடம் , உங்க insurance help desk (ஒரு எழுத முடியாத ஒரு வார்த்தை)

ஆளுங்களுக்குத்தான் மண்டையில் மூளையில்லை என்றால்,

உங்களுக்கும் ஒன்றுமே இல்லை...."

போன் கட்டாகிவிட்டது...

நண்பர்களே!
மருத்துவக்காப்பீடு செய்வது தற்சமயம் மிகவும் அவசியமாகி விட்டது. அதுவும் மருத்துவ செலவுகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால், சாதாரண middle class people மிக அவதிப் படுகிறார்கள். அதுவும் புற்று நோய் போல வியாதிகளின் தாக்கம் இருக்கும்போது இன்னும் அதிகமான கஷ்டம் தான்.
நாளுக்கு நாள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் புற்றீசல் போல் வந்துக்கொண்டே இருக்கின்றன. தகவல் நுட்ப துறைக்கு அடுத்து இப்பொழுது மிக வேகமாக வளரும் துறை இன்சூரன்ஸ்தான். ஆனால் நாம் இன்சூரன்ஸ் பண்ணுவதற்கு முன்பு ஆராய வேண்டிய, தெரிய வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த மருத்துவக்காப்பீடுகள் மூலம் நமக்கு நிறைய கஷ்டங்கள் தீருகின்றன..... ஆனால் நீங்க சரியான, இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுத்திருக்கிறீங்களா?

இது பற்றி என் அடுத்த பதிவில்..

Friday, August 3, 2007

மறக்க இயலாத நேரங்கள்....

அம்மா வீடு எப்பவுமே ஒரே அல்லோலகல் பட்டுக்கொண்டே

தான் இருக்கும். வீட்டில் நிறைய ஆட்கள் வேலை

செய்துக்கொண்டிருப்பார்கள்...நெல் அவிப்பது.....

வைக்கோல் காய வைப்பது.....

தினம் ஏதாவது ஒரு வேலை இருந்துக்கொண்டே

இருக்கும். அது மட்டுமின்றி எங்கள் வீட்டில் 50 பசு

மாடுகள் வேறு..... பால் கறப்பவர்கள், பால் வாங்க

வருபவர்கள்.. 'பண்ணை வீடு' மாதிரிதான்.

வீடே ஒரே சுறுசுறுப்பாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நடு மையத்தில் வீடு.

சுற்றியும் முற்றங்கள்....

செடிகள், மரங்கள், திராட்சை தோட்டம்,

"கப்பை" என்கிற கிழங்கு தோட்டம் .......

வீட்டை சுற்றி பெரீய மதில் சுவர்கள் .... ...

( நாங்க நாலு பெண்குட்டிகளாக்கும்)அப்பாவின்

எதிரில் நாங்கள் யாரும் நின்று பேச மாட்டோம்.

அவ்வளவு பயம்...ஒரு நாள் காலையில் வீடு ஒரே பரபரப்பு....

கொத்தனார்கள் சிலர் வந்து ஒரு பக்க மதிலை உடைத்தார்கள்.

செங்கல், சிமென்ட்..இத்யாதிகள்..

அப்பா அங்குமிங்குமாக வீறு நடை போட்டு வேலை வாங்கிக்

கொண்டிருந்தார்கள்... ஒரு வேப்ப மரத்தை

வெட்டினார்கள். அதில் சுற்றிகொண்டிருந்த பிச்சி பூ

கொடியை வெட்ட வேண்டிய சூழ் நிலை.. ..

அக்கா விற்கு ஒரே கவலை..

ஒரு மூச்சு அழுகை.. அப்பா அவளைப்

பார்த்து முறைத்தார்.. 'கப்சிப்' அடங்கி விட்டாள்.

நாங்களெல்லாம் பயந்தே போய் விட்டோம்...

ஒன்றும் புரியாமாலே பள்ளிக்கூடம் போய்விட்டோம்....

அக்கா மட்டும் தான் ஆசையாக வளர்த்த பிச்சி பூ

செடியை வெட்டி விட்டார்களே என்று சாப்பிடாமல்

இருந்தாள். சாயந்தரம் வீட்டுக்கு போகும் போது வீட்டின் முன் கூட்டம்....மாலை, எலுமிச்சம் பழம்... ..

அம்மாவும், அப்பாவும் எங்களை சீக்கிரம் போய் முகம்

கழுவிவிட்டு uniform மாற்றிவிட்டு வர சொன்னார்கள்....

'பாம்''பாம்' என்று சப்தம்....வந்தாச்சு வந்தாச்சு

என்று சொல்லி கொண்டு வீட்டில் வேலை செய்பவர்கள்

யாவரும் ரோட்டை நோக்கி ஓடினார்கள்...

அழகு ரதமாக வந்து நின்றது அப்பா வாங்கியிருந்த BROWN கலர் 'அம்பாசடர் கார்"......இது 1965 ல்.....

1985...
நானும் என் கணவ்ர் மாசியும் கார் வாங்க ஆசைப்பட்டோம்.

அப்போதுதான் மாருதி கார்களின் வருகை ஆரம்பம்.

அவருக்கு ராயல் என்பீல்டு புல்லட் வண்டி இருந்தாலும்,

எனக்கு (பொண்டாட்டி டாக்டராச்சே..சும்மாவா..)

ஒரு கார் வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டு ஒன்று புக் பண்ணினார்.

அட்வான்ஸாக ரூ 10,000/- கட்டிவிட்டு சுமார் 6 மாத

காலம் காத்திருந்து புது வண்டி எங்கள்

போலீஸ் குவார்ட்டர்ஸ்க்குள் நுழையும் போது

அத்தனை நண்பர்களும் சந்தோஷமாக எங்களை

வரவேற்றது... என்னவோ நேற்று நடந்தது போல்தான்

இருக்கு........ அதன் பிறகு நாங்களும் எத்தனையோ கார்கள்

மாற்றி விட்டோம்....

2007-ல்

நானும் இன்னைக்கு ஒரு காரு வாங்க போறேன்..

ஆனால் அந்த த்ரில், அந்த கூட்டம், அந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு

எல்லாம் missing...

Tuesday, July 31, 2007

சோர்ந்து போன தருணம்

நான் ஒரு மருத்துவராக இருப்பதால் மற்ற மருத்துவர்களை , ( அவர்கள் தவறு

செய்யும்போது) ஆதரிப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

அதற்காக நான் ரொம்ப நல்லவள், தவறே செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல

மாட்டேன். மருத்துவத்தில் சில சில தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால்

பாதிப்பு அதிகமாகும் போது அந்த தவறுகள் யார் செய்திருந்தாலும் மன்னிக்க

முடியாதுதான். என்ன! முன்னுரை பலமாக இருக்கிறதா?/

ஆனால் நான் இப்பொழுது

எழுதும் விஷயம் என் மனதை மிகவும் பாதித்த ஒன்று.

நான் திருச்சியில் இருந்த போது நடந்த சம்பவம் இது. (about 2 years back) எனக்கு

தெரிந்த ஒரு குடும்பம்.

இரண்டே பிள்ளைகள் (இரட்டைக குழந்தைகள்) . மூத்தவன் திவாகர் BE முடித்துவிட்டு

பெங்கலூரில் வேலை. அவன் தங்கை சுமதி. அவளும் BE முடித்துவிட்டு சென்னயில்

வேலை. மிகுந்த பாசாமான குடும்பம். முதன் முதலாக அண்ணன் தங்கை இரண்டு

பேரும் வெவ்வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை..மனமில்லாமல்

பிரிந்தனர்..

திவாகர் ஒரு நாள் காலையில் பெங்களூரிலிருந்து ஊருக்கு கிளம்பும் போது ஓடிப்

போய் பஸ் ஏற கீழே விழுந்து கை எலும்பு உடைந்தது. எப்படியோ திருச்சி வந்து

சேர்ந்துவிட்டான். அங்குதான் விதி விளையாடி விட்டது.

உடைந்த எலும்பை சரி செய்ய ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்தான். அறுவை

சிகிச்சைக்கும் தயாராகி.... அவன் நண்பர்கள் யாவருக்கும் தொலை பேசி, சிரித்து,

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எல்லோருடனும் பேசுகிறேன் என்று

சொல்லி உள்ளே போன திவாகர்..

மயக்க மருந்து கொடுக்கும் போதே....என்ன ஆச்சு என்று தெரியலை... மற்றும்

சில டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர் ... திவாகருக்கு ' வெண்டிலேட்டர்' மூலம்

சுவாசம்.... க்ளுக்கோஸ்.. பாட்டில்கள்....

நாட்கள், வாரங்கள் , மாதங்கள்.....ம்.. திவாகர் ஒரு "vegetable"---- "BRAIN DEATH" ....---

எவ்வளவோ வைததி்யங்கள்... உடைந்து போன குடும்பம்... திவாகரை காதலித்த

ஈழத்து பெண்... பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவர்கள்

குடும்பத்துடனே இருந்துவிட்டாள்.. physiotherapy.. ட்யூப் மூலம் சாப்பாடு

வகையறாக்கள் etc. etc....

இன்று காலையில் இங்கு மழை.....நானும் மழைக்காக ஆஸ்பத்திரியிலுள்ள கோவில்

பக்கம் ஒதுங்கினேன்..

அங்கு..

திவாகர், சுமதி, அந்த ஈழத்து பெண்....அடையாளம் தெரியாத அளவு மாற்றம்..

மெலிந்து, கண்களில் சோகம்..

திவாகர் இருண்ட வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. ...


ஒரு wheel chair-ல் உட்கார்ந்துக்கொண்டு....Tuesday, July 24, 2007

நீர்ஜா மலிக்...... 10 commandments of a cancer survivor to combat disease
நீர்ஜா மலிக் -க்கு மார்பில் கான்சர் இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்ட

போது அவருக்கு வயது 44. கையில் ஏழு வயது

இரட்டைக் குழந்தைகளுடன்

அவர் மும்பைக்கும் சென்னைக்குமாக வைத்தியத்திற்கு

அலைந்த போது மும்பையில் ஒரு

கேன்சர் சப்போர்ட் க்ரூப் உதவினார்கள்.

எல்லாவித சிகிச்சைகள் (கீமோ தெரப்பி & ரேடியேஷன் )

முடித்த பிறகுதான் அவருக்கு கேன்சர்

வந்தவர்கள் எவ்வளவுக் கஷ்டப்படுகிறார்கள்

என்பது தெரிய வந்தது.

நாம் பட்ட கஷ்டங்களைத் தானே

மற்றவர்களும் அனுபவிப்பார்கள் என்று நினைத்த அவர்,

அவர்க்ளுக்காக ஒரு சப்போர்ட் க்ரூப்பை

சென்னையில் நிறுவினார். (Apollo cancer support group).


2004-ல்

மீண்டும் அவருக்கு cancer அட்டாக் ஆன போது மிக

தைரியமாக வாழ்க்கையை எதிர் கொண்டார்.

முதலில் அடையார் cancer institute-ல் உள்ள

மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தவர்,

அதன் பிறகு பலதரப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு

சென்றார். எப்பொளுதும் சிரித்த முகத்துடன்,

குடும்ப BUSINESS- , சமூகத்தொண்டையும் சரியானபடி

BALANCE செய்து, சமூக சேவை செய்துக்கொண்டிருக்கும் நீர்ஜா

உண்மையிலே ஒரு அபூர்வமான பெண் தான்.

Fighting the big C

Neerja evolved these survival commandments:

  • Cancer is just a word, nothing more nothing less.

  • Begin to respect and love your chemotherapy, radiation and other treatments. They are your friends and companions. If they take a toll, they also are most generous in the favours they bestow on you.

  • You should not regard your cancer as the sum total of your life but merely a part of it.

  • You should learn all the details of your disease, its diagnosis, its prognosis and its treatment. This way you will learn to cooperate with your doctors intelligently and knowledgeably.

  • You should give comfort in every possible way to your fellow sufferers, you should give them hope where there may be none. Only in hope is their salvation.

  • Do not surrender to cancer, instead fill your life with every moment of joy.

  • Express your feelings openly to your loved ones as they too need comforting and re-assurance.

  • By all means you should maintain your sense of humour and laughter as it lightens the heart and hastens your recovery.

  • If you fear your disease, it will grow and grow but if you face this fear, it will disappear.


Sunday, July 22, 2007

தெரிந்துக்கொள்ளுங்கள்-3

நான்கு நாட்களுக்கு முன்பு நம் blogger friend - டமிருந்து எனக்கு ஒரு மெயில்

வந்தது. அதில் அவருடைய தமிழ் ஆசிரியரை ஆஸ்பத்திரியில்
சேர்த்திருப்பதாகவும் , அவரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுக்க வேண்டும்
என்றும் எழுதியிருந்தார். நானும் ஆசிரியரை போய் பார்த்தேன். 69 வயதான
திரு. இராமபத்ரன் அவர்கள் , எந்த விதமான உணர்வும் இல்லாது
படுத்திருந்தார். மயிலாடுதுறையில், காலயில் குளித்துக்கொண்டிருக்கும் போது
கீழே விழுந்து அதன் பிறகு பாண்டிசேரி
போய், அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தார். 15 நாட்களுக்கு
மேல் I.C.U.- லிருந்து அப்புறம் neuro I>C.U விற்கு மாற்றியுள்ளார்கள். இத்தனை
நாளும் வெண்டிலேட்டரிலிருந்து தற்சமயம் அதிலிருந்து wean பண்ணி,
ஆனாலும் critical stage தாண்டவில்லை. tracheostomy- பண்ணியிருந்தது.. ...
இவர் basal Ganglionic bleed என்ற நோயினால் கஷ்டப்படுகிறார்.
இதன் காரணம்...
மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் வெடித்ததால் வந்த கஷ்டம்.
நாம் நிறைய நேரங்களில் நமக்கு வரும் வியாதிகளை serious ஆக
எடுத்துக்கொள்வதே இல்லை. தமிழ் ஆசிரியரும் அப்படித்தான் இருந்திருக்க
வேண்டும். ஏனெனில் அவருக்கு, இரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும்
சேர்ந்தே இருந்திருக்கிறது. அவர் அதற்கு சரியான வைத்தியம்
பண்ணிக்கொண்டாரா என்று தெரியவில்லை. தொந்தரவுகள் எதுவும் இல்லாத
வரை நாம் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்.
இந்த இரண்டு நோய்களும் ஆரம்ப காலத்தில் எந்த வித கஷ்டங்களையும்
கொடுக்காது. இரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் பெரும்பான்மையில்
இரட்டைக்குழந்தைகள் போல். சேர்ந்தே வரும்.....

இதில் அதிக பாதிப்பு ஆண்களுக்குதான். மாரடைப்பு, மூளையிலுள்ள இரத்த
குழாய்கள் வெடிப்பது போன்ற மிக serious ஆன நோய்களால்
தாக்கபபடுகிறார்கள். just simple steps to be followed..
40 வயதுக்கு மேலான ஆண்கள் மாதம் ஒரு முறை B.P-ம் , மூன்று
மாதத்திற்கு ஒரு முறை blood sugar -ம் test பண்ணிப்பார்த்துக்கொள்ள
வேண்டும். 2 வருடத்திற்கு ஒரு முறை master health check up அவசியம் பண்ண
வேண்டும். நிறைய ஆஸ்பத்திரிகளில் இப்பொழுது இந்த வசதி உண்டு.... இது
ஒரு package. தேவையான எல்லா டெஸ்ட்களும் இதில் அடக்கம். சாப்பாட்டில்
கொஞ்சம் கட்டுப்பாடோடு இருப்பது மிக அவசியம். atleast 20 minutes of brisk
walking is necessary.
திரு ராம பத்திரனுடைய சிகிச்சைக்கான நிறைய செலவுகளை அவரது
மாணவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பது உண்மையிலே பாராட்டுக்குறிய
விஷயம்....
அபிஅப்பா & சீமாச்சு .... உங்களுக்காக .....அவர் நிச்சயம் சீக்கிரமாக
குணமடைவார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு..

Friday, July 20, 2007

இது ஒரு வீக் என்ட் பதிவு..///

இது ஒரு வீக் என்ட் பதிவு..
ஒரு டாக்டர்.. PROFESSOR... .. ஒரு நாளைக்கு ஐந்து பேருக்கு மேல் பார்க்க மாட்டார். பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவருக்கு நேரமே இருக்காது. neuro சர்ஜரியில் மிகவும் பேர் போனவர். COMPUTER ASSISTED SURGERY-ல்... மண்டைக்குள் ஓட்டை போட்டு செய்கிற SURGERY எல்லாம் அவருக்கு ஒரு சில மணி நேரம் தான்.
மாலை ஐந்து மணி கன்சல்டேஷனுக்கு 4.59 க்கு வருவார். அதற்கு முன் IN PATIENT- போய் பார்த்துவிடுவார். ஆனால் பொறுமைக் கொஞ்சம் கம்மி தான். குடு குடுப்பாண்டி போல் ஓடிக்கொண்டே இருப்பார்.
இப்படித்தான்.....
..ஒரு நாள் அவருக்கு ஐந்துபேர் காத்துக்கொண்டிருந்தனர்.
அவர் SECRETARY அவரிடம் CASE FOLDERS கொண்டு கொடுத்துவிட்டு PATIENTS பற்றி ஒரு சின்ன முன்னோட்டம் கொடுத்தாள்.
முதல் பேஷண்ட் பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியலை.. நேரே படியேறி..(லிப்ட் உபயோகிக்க மாட்டர்.) மூன்றாவது மாடியிலுள்ள ஒரு பேஷண்டைப் பார்த்துவிட்டு திரும்பி CONSULTATION- க்கு வந்தார். அடுத்த பேஷண்ட்...முடிந்தது.... மூன்றாவது பேஷண்டை உட்கார சொன்னார் பரிசோதித்தார். அவர் பாட்டுக்கு காரில் ஏறி போய் விட்டார். கவுச்சில் படுத்திருந்த பேஷண்ட் ரொம்ப நேரமாக டாக்டரை காணாததும் secretary-டம் டாக்டர் எங்கே என அவளுக்கு ஒன்றும் புரியலை.... அவள் உடனே மொபைலில் டாக்டரை விழித்தாள்.. டாக்டர் வீட்டுக்கு மறந்து போயே விட்டார். அதன் பிறகு அவர் திரும்பி வந்து patient பார்த்தது அடுத்த விஷயம்.. ஆனால் இங்கு என்ன பிரச்னை என்றால் வாரத்தில் ஒரு தடவையாவது அவர் இது மாதிரி செய்யவே, நம்ப SECRETARY உடனே அவர் எங்கு சென்றாலும் போனில் கூப்பிட்டு LOCATION கேட்க ஆரம்பித்தாள். இப்படித்தான் இரண்டு வாரத்திற்கு முன்பு டாக்டர் இப்படி பண்ணவே, அவளும் LOCATION கேட்க அவர் வீட்டம்மா , அவளிடம் 'என்ன என் கணவரை வேவு பார்க்கிறாயா?' என்று கத்த இவளுக்கு ஒன்றுமே புரியலை. இத்தனைக்கும் நமது மருத்துவருக்கு 60-க்கு மேல் வயது... வீட்டுக்கு வீடு வாசற்படித்தான்..

சரி வந்தது வந்துட்டீங்க இங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க.. எனக்கு பிடித்த ஒரு ஆசிரியர்... எழுதியதை...
have a safe week end..
safe driving...

Wednesday, July 18, 2007

தெரிந்துக் கொள்ளுங்கள்-2

அட்ரியனை நான் இன்று சந்தித்தேன். என்ன அழகு அவன்.....
என்னைப்பார்த்து சிரித்தபோது......எனக்கு அவனை கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் போல் இருந்தது..... ம்ம். கொடுத்தும் விட்டேன். ஒரே சிரிப்புத்தான் அவனுக்கு....... சந்தோஷம் எனக்கு.. பின்ன இருக்காதா...... குறு குறுவென்ற கண்களுடன்.....காந்த கண்கள்.. ..

அட்ரியனுக்க வயது இரண்டு....நேற்றுதான் பிறந்த நாள் கொண்டாடினான். அவன் அப்பாவின் கையிலிருந்து என் மீது தாவ முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவன் அம்மாவிடம் ஒரு சந்தோஷம் கலந்த துக்க சிரிப்பு. இந்த சிறு குழந்தைங்கு பார்க்கும் போதெல்லம் மனதில் ஒரு.. பதட்டம். அவன் அம்மாவும் அப்பாவும் ஒரு விமான comapany -L வேலை. கை நிறைய சம்பளம். தாய் தந்தையோடு கூட்டு குடும்பம். கல கலவென்று இருந்த அந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய அடி..

அட்ரியனின் வலது testis -ல் ஒரு சின்ன கட்டி.. வீக்கம்.. தொட்டால் வலி கிடையாது. ஆரம்பித்து 15 நாட்கள்தான் ஆகியிருந்தது. மும்பையில் ஒரு சிறிய ஆஸ்பத்திரியில் காண்பித்திருக்கிறார்கள். 3 நாட்களுக்கு antibiotics.(தேவை இல்லாதது). அதன் பிறகு ரத்த பரிசோதனைகள்....இரண்டு மூன்று டாக்டர்களிடம் மாறி மாறி கன்சல்டேஷன்...ஒரு வழியாக ஸ்கேன் மூலம் கண்டு பிடிக்க 15 நாட்கள் ஆகிவிட்டது. அந்த சின்ன கட்டியிலிருந்து பயாப்சி செய்த போது ...... பெரிய ஷாக்.
ரேப்டோமையோ சார்கோமா (Rhabdomyosarcoma)....... ஆப்பரேஷன் மூலம் அந்த பக்கத்து testes யை எடுத்துவிட்டார்கள். தற்சமயம் CHEMO THERAPY AND RADIATION -க்கும் சென்னை வந்துள்ளார்கள்.....

..குழந்தைகளை மட்டும் தாக்கும் இது ஒரு வினோதமான கேன்சர். ஒரு பில்லியன் குழந்தைகளில் ஒன்று என்கிற விகிதம். இந்தியாவில் அதிகமாக இந்த மாதிரியான கேன்சர் ரிப்போர்ட் ஆகவில்லை. இது சதைகள், கொழுப்பான பிரதேசங்கள், ரத்தக் குழாய், மற்றும் நரம்புகளிலிருந்து, உருவாகிறது.... சிறு குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றன. கருவில் இருக்கும் பொழுதே இந்த cancer உருவாகுவதும் உண்டு.
முதலில் CHEMOTHERAPY-ம் அதன் பிறகு RADATION-ம் கொடுக்க PLAN . குழந்தை எப்படி தாக்கு பிடிக்க போகிறதோ? மிகவும் கஞ்சத்தனமான அந்த company இந்த குழந்தையின் மருத்துவ செலவை முழுவதும் ஏற்றுக் கொன்டிருப்பது ஒன்றுதான் ஆறுதலான விஷயம்..

தெரிந்துக்கொள்ளுங்கள்-1

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் காலத்திலும் புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு.( பால் கொடுப்பதால் அல்ல) . குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் ,போது மார்பில் கட்டி வந்தால் உடனே பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும். 'பால் கட்டி' என்றோ, அல்லது பால் கொடுப்பதை நிறுத்தினால் சரியாகி விடும் என்று அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மேம்மோக்ராம் செய்வது உடனே அவசியமாகிறது. மேம்மோக்ராம்க்கு செல்லும் முன் breast pump மூலமாக மார்பிலிருந்து பாலை வெளியேற்றி விட வேண்டும். அப்படி செய்தால்தான் மேம்மோக்ராம் ரிசல்ட் சரியாக இருக்கும். மேம்மோக்ரமும் (MAMMOGRAM), மார்பு சோனோக்ரமும் (SONOGRAM) செய்யும் போது 100% சரியான ரிசல்ட் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. 10% முதல் 15% வரை தவறான ரிசல்ட் கிடைக்க வாய்ப்புண்டு. ஆகவே பயாப்சி பண்ணுவது அவசியாமாகிறது. FINE NEEDLE BIOPSY செய்து பார்க்கலாம். ஒரு சிறிய ஊசியை உள்ளே செலுத்தி கட்டி அல்லது வீக்கத்திலிருந்து கொஞ்சம் செல்களை (cells) எடுத்து மைக்ரோஸ்கோப் மூலம் பரிசோதித்து பார்க்க படுகிறது.
இது வலியில்லாத ஒரு சின்ன PROCEDURE USUALY DONE AS AN OUT PATIENT.

பாலூட்டும் சமயங்களில் தய்மாருக்கு வரும் ஏனைய பிரச்னைகள்.

1) போதிய அளவு பால் இல்லாதது.

2 ) மார்பின் காம்புகள் புண்ணாகிவிடுவது.

3) மார்பு வீங்குவது.

4) மார்பிலிருந்து இரத்தம் அல்லது சீழ் வடிதல்.

5 )தட்டையான காம்புகள்.

Sunday, July 15, 2007

நம் younger generation.....

வாழ்க்கையின் நிறைய நாட்களை மகப்பேரு மருத்துவத்திலே கழித்துவிட்டதால்,

வாழ்க்கையில் எனக்கு எப்பவுமே ஒரு பாசிட்டிவ் நோக்கம்( positive attitude) உண்டு.


கர்ப்பிணி பெண்கள் குழந்தை பேறுக்கு வரும்போது 8-லிருந்து 10 மணி நேரம்


கஷ்டப்படுவார்கள். ஒரு சில சமயங்களில் மாத்திரமே 24 மணி நேரம் ஆகும்.


எதுவாயிருந்தாலும் ஒரு அழகுக் குழந்தை, ரோஸ் கலரில் கையை, காலை ஆட்டி


உதைக்கும்போதும் அதை நாங்கள் நிமிண்டி விட்டு, அழ வைத்து வேடிக்கைப்


பார்க்கும்போதும் அதன் அழகே தனிதான். அதுவும் அந்த தாய்க்கு அவ்வளவு

வேதனை பட்டபிறகு அவள் குழந்தையைப் பார்க்கும்பொழுதும் கட்டி அணைத்துக்

கொஞ்சும் போதும் உலகத்தில் அவள் பட்ட கஷ்டங்கள் யாவும் மறந்தே

போய்விடுகிறது. எனக்கும்தான்...

இந்த 10 மாதங்களாக நான் இந்த சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவே


தோன்றுகிறது. இரவு, பகல் என்று வேலைப்பார்த்தது போய் ஆபீஸ் நேரத்தை தேர்ந்து

எடுத்து ஒரு பெரிய ஆஸ்பத்திரியின் நிர்வாகத்திலிருப்பது challenging ஆக


இருந்தாலும், அந்த பிஞ்சுக் குழந்தைகளைக் கையில் எடுத்த நாட்கள் நிச்சயமாக ஒரு


வசந்தகாலமாகியப் பொற்காலம்தான். நல்ல நேரங்களை மட்டும் வாழ்க்கையில்


பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தற்சமயம் புற்று நோயால் அவதிப்படுபவர்களைப்


பார்க்கும்போது மனதை என்னவோ செய்கிறது. இந்த நோயாளிகளைப்


பார்க்கும்போதெல்லாம் வாழ்க்கையின் quality of life போய்

விட்டதோ என்று கூட நினைக்க தோன்றுகிறது. அதிலும் மிகவும் இள வயதினரை,


குழந்தைகளை புற்று நோய் தாக்கும் போதும், அந்த குழந்தைகளும் அவர்கள்


பெற்றோர்களும் படும் வேதனைகளையும் வார்த்தையால் விவரிக்க இயலாது.

chemotherapy-க்கும் radiation-க்கும் வரும் பலதரப்பட்ட ஆண், பெண்களை

பார்க்கும்போது என்னை அறியாமலே எனக்குள் ஒரு insecurity உண்டாகிறது.

ஆஸ்பத்திரி corridor-ல் நேற்று நடந்து சென்றுக் கொண்டிருந்த போது நான்


பார்த்த ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. 25 வயதான , brain tumour-ல்

அவதிப்படும் ஒரு மணிப்புரி பெண்ணிற்கு தலயை மொட்டை அடித்து, 25 தையல்கள்

போட்டு இருந்தது. அவளுக்கு ஒரு காலும் கையும் உணர்ச்சியற்றுப்போய் இருந்தது.

அவளை ஒரு wheel chair-ல் வைத்து ஜன்னல் பக்கம் வேடிக்கை

காண்பித்துக்கொண்டிருந்தாள் ஒரு உதவி செவிலி (nursing aid). இந்த பெண்ணுக்கும்

21 வயதுதான் இருக்கும். மணிப்புரி பெண்ணுக்கு சுத்தமாக தலை நிற்காததால் இந்த

நர்ஸ் பொண்ணு அவள் மீது தலையை சாய்க்கவைத்து , அவள் வாயிலிருந்து ஒழுகும

ஜொள்ளை (drool) துடைத்துவிட்டு வேடிக்கைக் காண்பித்துக்கொண்டிருந்தாள். மொழி

வித்தியாசமாக இருந்தாலும், எதோ தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே

இருந்தாள். அதன் பிறகு அவள் காதில் ear phones மாட்டிவிட்டு ஒரு Walkman-ல்

பாட்டு போட்டு காண்பித்தாள். கொஞ்ச நேரம் கழித்து நர்ஸ் பொண்ணு அழகாக ஒரு

தமிழ் பாடலை அவளுக்கு பாடிக் காட்டினாள்.

எவ்வளவு சகிப்புத்தன்மை, எவ்வளவு பொறுமை! எவ்வளவு concern!


நம் இளம் வயதினர் உண்மையிலே பாராட்டுக்குரியவர்கள்தான்.

Truly we are blessed
to have such young people in our land....
Tuesday, July 10, 2007

'குடிப்பழக்கம்'--- ஒரு 'NO' சொல்லலாமே!

குடிப்பழக்கம் அதிகமான, குடிக்க வேண்டும் என்று உணர்வுள்ள நண்பர், குடிபழக்கத்திற்கு அடிமையான நண்பர் அல்லது உறவினருக்கு எப்படி நம்மாலான உதவிகளை செய்ய முடியும்?நமக்கு தெரிந்தவர்களில் யாராவது குடிக்க வேண்டும் அல்லது அளவுக்கு
அதிகமாகக்குடித்து தன் வாழ்க்கையையும், தன்னை சுற்றி இருப்பவர்களின்
வாழ்க்கையையும் நாசமாக்கவேண்டும் என்கிற உணர்வுடன் இருப்பவர்களை,
அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சிப்பதே நமது முதல் செயலாகும்.
தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களை, நமக்கு
தெரிந்தவர்கள் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம்
செய்யலாமே.

அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேட்பது மிகவும் சிறந்த செயல். எதனால்
அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுக் கண்டறிய வேண்டும். குடிக்க
வேண்டும் என்கிற உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ
தேடுவதில்லை. அவர்களை நமது வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு
சுலபமானாதும் இல்லை. அவர்களுடைய மற்றொரு முகத்தை காண்பிக்கவும், ஒரு
சிலர் அவர்களுடைய மன ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு mask
அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

கேட்பது (listening)- உண்மையாகக் கேட்டல்(true and sincere) - அவ்வளவு
எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகக் கருத்துக்கூறுவது,
அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுவது - என்ற நமது உள்ளுணர்வை
நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது
மட்டுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை அவர்களது
கோணத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும், ...not from our view.


குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய
சில அம்சங்கள்

அவர் எதற்காக இதை செய்கிறார்?

அவர் எந்த கோணத்தில் வாழ்க்கையை நோக்குகிறார்?

எந்த விதத்தில் அவரது மனம் நோகடிக்கப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்பட்டுள்ளது?

தன் சுய நினைவை இழப்பதற்காக இந்த செயலை செய்கிறாரா?

வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாததால் இதில் ஈடுபடுகிறாரா?

மனதில் தீராத ஒரு பயத்தினால் செய்கிறாரா? அல்லது ஒரு தமாஷுக்கு செய்கிறாரா?

ஒரு நம்பிக்கையான, அக்கறைகாட்டும் ஒருவரை நாம் தேர்வு செய்துக்

கொள்ளவேண்டும். வாழ்க்கையின் நல்ல கணங்களை எடுத்துக்கூறலாம்.

அவருக்கு நிறைய importance கொடுத்து அவர் பிரச்னைக்கு தீர்வுக்காண sincere
ஆக முயற்சிக்கவேண்டும்..

குடிப்பழக்கத்தால் வரும் பின்விளைவுகள், குடும்பத்தாருக்கு அதனால் ஏற்படும்

வேதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லலாம்..


குடிப்பழக்கத்தை விடுவதற்கு Naltrexone (Vivitrol), Disulfiram (Antabuse) போன்ற

மருந்துக்கள் தான் தற்சமயம் உபயோகப் படுத்தப்படுகின்றன.

counseling is the best form of treatment. there are lots of support groups who help

in deaddiction. 24 மணிநேர helpline-ம் உள்ளது.

SAY 'NO' TO ALCOHOL.....

Tuesday, July 3, 2007

அம்மணிகளுக்கு!!!!

1980 -ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு incident.

அப்பொழுதுதான் சென்னையிலிருந்து வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரத்திற்கு மாற்றலாகி போயிருந்தோம்...நல்ல வேளை! ஜூலை மாதத்தில் மாற்றலாகியிருந்ததால், ஸ்கூல் அட்மிஷன் கிடைத்தது. எனக்கும் அங்குள்ள ஒரு NURSING HOME-ல் வேலை கிடைத்தது.(we were very new to the town).

நக்ஸலைட் தீவிரவாதிகள் கொஞ்சம் ஊடுருவியிருந்த நேரம். காட்டில் ஒரு 20 நாட்கள் கேம்ப் என்று போய்விட்டார். அந்த நாட்களில் இப்ப மாதிரி சரியான கம்யூனிகேஷன் வசதி கிடையாது. 'ட்ரங்க்' புக் பண்ணி மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். எப்பொழுது வீட்டிற்கு வருவார் என்பதெல்லாம் தெரியாது.(இதனால் குழந்தைகளை சமாளிப்பது பெருங்கஷ்டம்..அப்பா எப்போ வருவாங்க என்ற கேள்விக்கு, தேய்ந்து போன கிராம போன் ரெக்கார்ட் மாதிரி ஒரே பதில் சொல்ல வேண்டியிருக்கும்)
ஒரு நாள் மாலை 5 மணியளவில் 45 வயது மதிக்கதக்க ஒருத்தர் எங்கள் வீட்டிற்கு வந்து, எனது அத்தையிடம் என்னைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.. அத்தையும் ஏதோ பேஷண்ட் என்று நினைத்து என்னைக் கூப்பிட்டார்கள். ' சார், duty க்கு போன இடத்தில் அடிபட்டு, ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்னியுள்ளார்கள்' என்று பதட்டமாக சொன்னார். இதைக்கேட்ட என் அத்தை ' என்ன ' என்று சத்தம். என்னுடைய மனதும் கொஞ்சம் பதட்டம் அடைந்தது. அவர் விலாவாரியாக எனக்கு சொல்ல ஆரம்பித்தார். அந்த காட்டிற்குள் செல்வது கஷ்டம். அதனால் அவரே என்னை அழைத்துச் செல்வதாக கூறினார். மனதில் கவலை, சந்தேகம், ஒரு உறுத்தல . 'அப்படியும் ஆகியுருக்குமோ?'. தொலைபேசி வசதி வீட்டில் இல்லை.
என் கணவ்ர் எப்பொழுது வெளியூர் சென்றாலும், போய் சேர்ந்ததும் தகவல் சொல்ல சொல்லுவேன் . அவர், ' எனக்கு ஏதாவது ஆனால் முதன் முதலில் உனக்குத்தான் தகவல் வரும். எந்த தகவலும் வரவில்லை என்றால் நான் சுகமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்' என்பார். இது என் மனதில் வரவே, நான் பின்பக்கம் போய் மாடி ஏறி பக்கத்து வீட்டு(parapet wall) சுவரைத் தாண்டி, அவர்களிடமுள்ள தொலை பேசி மூலம், காவல் நிலயத்தை தொடர்புக்கொண்டேன். writer உடனே 'அம்மா மைக் வாட்ச் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த அசம்பாவிதமும் கிடையாது, எதற்கும் நான் அந்த கேம்ப்க்கு போன் மூலம் தொடர்புக்கொண்டு சொல்கிறேன் என்று நான் பேசிய தொலைபேசியின் நம்பரை வாங்கிக் கொண்டார். என்னுடைய பதட்டம் அவருக்கு நியாயமாக தோன்றிருக்கிறது.
திரும்பி போலிஸ் ஸ்டேஷனிலிருந்து பதில் வராமல் போகவே நான் செய்வது தெரியாமல் வீட்டிற்குள் வந்தேன். . இத்ற்கிடையில் என் அத்தை வந்த மகாரஜனுக்கு காபிக்கொடுத்து உபசரணை. மருமகளை பத்திரமாக அழைத்துக்கொண்டு செல்லும்படி அன்புக் கட்டளை வேறு.
ஒரு சில நிமிடத்தில் ஒரு போலிஸ் ஜீப்பில், இன்ஸ்பெக்டர் சில காண்ஸ்டபிள்கள்....... வந்திருந்த நபர் ஒரு மாதிரியாகிவிட்டார். முதன் முதலில் சாதரண தொனியில் விசாரணை. அதன் பிறகு, காவல் துறை பாணி விசாரணை..
அப்புறம்தான் தெரிந்தது உண்மை...... 3 வருடங்களுக்கு முன்பு ஒரு 'திருட்டுக் கேசில் என் கணவ்ர் அவருக்கு 2 வருடம் தண்டனை வாங்கிக் கொடுத்ததை மனதில் வைத்து பழிவாங்க துடித்திருக்கிறார். நாங்கள் தனியாக இருந்த நேரம் பார்த்து குடும்பத்திற்கு ஏதாவது கஷ்டம் கொடுக்கலாம் என்று நினைத்து வந்திருக்கிறார்..நேற்று என் பக்கத்துவீட்டு பெண்மணியிடம் இப்படித்தான் ஒருத்தன் ' GAS LEAK' செக் பண்ணுகிறேன் என்று பணம் பறிக்க முயன்று நல்ல தரும அடி வாங்கி சென்றான்.

நாம் தனியாக வீட்டில் இருக்கும் போது தெரியாதவர்கள் யார் வந்தாலும் நாம் வீட்டிற்குள் விடக்கூடது எனபதைச் சொல்லத்தான் இதை எழுதிருக்கிறேன். வீட்டிலிருக்கும் அம்மணிகளும், தங்க மணிகளும் ஜாக்கிரதையாக இருங்கள். grill gate வழியாக பேசி அனுப்பிவிடுங்கள். இப்பொழுதுதான் cell phone வசதி உள்ளதே! யார், என்னவென்று confirm பண்ணிக்கொள்ளலாமே!

Saturday, June 30, 2007

சின்ன சின்ன எட்டுகள்.....

வல்லி உங்களுக்குத்தான் என் முதல் நன்றி........ you have been the source of inspiration to start my Tamil blog apart from தெ.கா.
தமிழ்மணத்திற்குள் அவ்வப்போது வந்து என் பின்னோட்டங்களை மட்டும் இட்டு பதிவுகளையும், கும்மிகளையும் ரசித்துக்கொண்டிருந்த எனக்கு .
இப்போதைக்கு இது ஒரு பிரளயத்தனமான முயற்சிதான்.
எட்டு சாதனைகள்...no no எட்டு incidents? in life...
மறக்க முடியாத நல்ல விஷயங்கள் பல...
மறக்க முயற்சி செய்பவைகள் சில....
1953:
நான் பிறந்த
அன்றே ஒரு சாதனை படைத்துவிட்டேன். ஆண்குழந்தை பிறக்கும் என்று ஆவலாக இருந்த அப்பாவிற்கு நான் வந்து பிறந்தால், ஏப்ரல் ஒன்றாம் தேதி
அதுவும் இரண்டு பெண்களுக்கு பின்பு ...
என்னைப் பார்க்க கூட பிடிக்காமல் எடுத்தாரே ஒரு ஓட்டம்..பாம்பே போய் பதினைந்து நாட்கள் தங்கி அதன் பிறகு வந்து என்னைப்பார்த்தாராம். (how disappointing!)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது TRINITY COLLEGE OF MUSIC -LONDON-ல் violin courses எடுத்து அதன் பிறகு, முதன் முதலாக ஒரு concert-ல் solo வாக violin வாசித்தது.. இன்றளவும் அது எனக்கு ஒரு பெரிய விஷயம்தான்.

SSLC படிக்கும்போது நடந்த விஷயம்.. அரையாண்டு பரீட்சையில் தமிழில் 20 மார்க்கும், composite maths -ல் 30 மார்க்கும் வாங்கி சாதனை படைத்தேன்.. அதற்குக் கிடைத்த பரிசு?
என் டீச்சர், என் டெஸ்ட் paperஐ முதுகில் குத்திவிட்டு ஒரு நாள் முழுவதும் ஸ்கூலில் இருந்து அதோடு வீட்டுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது...
அன்று என் முதுகும் பழுத்துவிட்டது....(cool)


ஆனால் இந்த தோல்வியும் அதற்கு எனக்கு கிடைத்த தண்டனையும் என் வாழ்க்கையே மாற்றியது. p.u.c.ல் மதுரை university ல்
இரண்டாவது ரேங்க் எடுத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.(cake walk?)

1975
எனது மிக பெரிய சாதனை இதுதான்...மிகவும் orthodox ஆன குடும்பத்திலிருந்து வந்த நான் ஒரு காவல் துறை அதிகாரியை காதலித்து திருமணம் செய்தது... அவருடன் வாழ்ந்த நாட்களே பெரிய சாதனைதான் :) .... இரண்டு அழகான குழந்தைகள், அவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை.. 17 வெவ்வேறு ஊர்கள் (காதல் வாழ்க).:))))))))))))


1978
படித்து முடித்த கையோடு தாராபுரம் என்ற ஊரில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அனுபவம் இது.
கிராமத்தில் ஒரு மருத்துவ அம்மணியால் குழந்தை பேறு பார்க்கபட்ட ஒரு பெண்ணிற்கு... ஆறாவது பிரசவம் குழந்தை பிறந்து 15 மணி நேரமாகியும் நஞ்சு (placenta) வெளியே வராமல், உதிரம் கொட்டி..... பேச்சு மூச்சு இல்லாமல் ...ஒரு மாட்டு வண்டியில் வைக்கோலை பரப்பி அந்த பெண்ணை அதில் படுக்க வைத்து, நடு ராத்திரியில் கொண்டு வந்தார்கள்.
கஷ்டப்பட்டு நஞ்சை வெளியில் எடுத்து, ஆஸ்பத்திரியில் வேலைப்பார்த்த staff+ நான் யாவரும் ரத்தம் கொடுத்து அந்த பெண்ணைக் காப்பாற்றியது. அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணின் குழந்தைகள் ஆளுக்கு ஒர் sweet வைத்துக்கொண்டு எனக்காக காத்துக்கொண்டிருந்தது. (we were so committed)

1978-2006..

இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)
டாக்டர்ஸ் தினமான இன்று இதை எழுதுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்!

2006
என் கணவர் கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி விட்டதால் அவர் ஜூலை மாதமே சென்னை வந்து விட்டார். நான் அக்டோபர் மாதம்தான் வர முடிந்தது. தன்னந்தனியாக காரை ஓட்டிக்கொண்டு கோவையிலிருந்து சென்னை வந்த என்னை...
அவர் ஆபிஸில் மற்றக்காவல் துறை அதிகாரிகள் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் என் உச்சி முகர்ந்து " you can try going for the Himalayan Rally"
என்று சொன்னபோது
..இரண்டுபேர் கண்களிலும் கண்ணீர் துளிகள்.( daring devil).
தற்சமயம் சென்னை trafficல் கார் ஓட்டுவது அதைவிட மிக பெரிய சாதனை...


எட்டு பேரை அழைக்கணுமா? கஷ்டம்தான்.
இதை வாசிக்கும் நண்பர்கள் உதவி செய்யுங்களேன்!